அடுத்த திருமணத்திற்கு ரெடியான வனிதா விஜயகுமார்?!. கணவர் யார் தெரியுமா?!...

குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். அம்மா மஞ்சுளாவின் செல்லமான வனிதா விஜயுடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். சீரியல் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகனும் உண்டு.

அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தற்போது அவரின் மகன் ஆகாஷிடம் வளர்ந்து வருகிறார். மேலும், ஒரு திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அதன்பின், ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.

அதில் மூத்தவர்தான் ஜோவிகா விஜயகுமார். இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2வது கணவரையும் பிரிந்த வனிதா சில வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தார். திடீரென பீட்டர் பால் என்பவரோடு அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி போலீசாரில் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்குகளை சந்தித்தார் வனிதா. மேலும், வனிதாவின் இந்த முடிவை எதிர்த்து கருத்து சொன்ன நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார் வனிதா.


திருமணமாகி சில மாதங்களிலேயே பீட்டர் பாலின் நடவடிக்கை சரியில்லை என சொல்லி அவரையும் பிரிந்தார் வனிதா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான பீட்டர் பால் திடீரென மரணமடைந்தார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சினிமாவில் நடிப்பது, யுடியூப்பில் சமையல் வீடியோ போடுவது என பிஸி ஆனார் வனிதா.


இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டரை வனிதா 4வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. மேலும், வருகிற அக்டோபர் 5ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறவிருப்ப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, திருமண பத்திரிக்கையும் வெளியாகியுள்ளது.

வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் பல வருடங்களுக்கு முன்பே ஒருவரை ஒருவர் காதலித்தவர்கள். வனிதா சொந்த காசை போட்டு எடுத்த ஒரு படத்தை ராபர்ட் இயக்கியும் இருந்தார். அந்த படம் நஷ்டமடைந்தது. அதனால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது மீண்டும் இருவரும் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it