கை ஃபுல்லா வளையல்... கல்யாண கலை வந்துடுச்சே... திருமணத்திற்கு ரெடியான வனிதா அக்கா..?
சமூக வலைதள பக்கங்களில் தற்போது ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது வனிதா விஜயகுமாரின் கல்யாண பேச்சு தான். நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் மாணிக்கம், ஹிட்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதையடுத்து 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியை இவருக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த வனிதா விஜயகுமார் 2007 ஆம் ஆண்டு ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கும் ஒரு மகள் இருக்கின்றார். இவரின் மூத்த மகனான ஸ்ரீஹரி, அவரது தந்தை ஆகாஷ் உடன் வளர்ந்து வரும் நிலையில் மற்ற இரண்டு மகள்களை மட்டுமே வனிதா விஜயகுமார் வளர்த்து வருகின்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சிக்குச் சென்ற வனிதா விஜயகுமார் அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சீரியல் என படு பிசியானார். தற்போது வெள்ளி திரையில் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பீட்டர் பால் என்ற நபரையும் திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் தான் பீட்டர் பால் உயிரிழந்தார். தற்போது வனிதா விஜயகுமார் தில்லு இருந்து போராடு, ஆபரேஷன் லைலா, அந்த கண், பிக் அப் டிராப் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இதை தொடர்ந்து நேற்று யாரும் எதிர்பாராத வகையில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த புகைப்படத்தில் 'சேவ் த டேட் அக்டோபர் ௫' என்று குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதாவிற்கு மறுபடியும் கல்யாணமா? என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வந்தார்கள்.
மேலும் இது மிஸ்டர் & மிஸஸ் படத்திற்கான போஸ்டர் என்று ஒரு சிலர் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் கை நிறைய வளையல் போட்டு இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன வனிதா அக்கா கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போலயே? என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.