விஷால் பற்றிய அப்டேட்.. இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல.. வரலட்சுமி கொடுத்த பதில்

by ROHINI |
vishal
X

vishal

விஷால் உடல் நலம் குறித்த செய்தி கொஞ்ச நாள்களாக இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தொடர்ந்து தாமிரப்பரணி, திமிரு, சத்யம் போன்ற பல படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அதிலிருந்தே அவருக்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள்.

தீராத விளையாட்டு பிள்ளை படத்த்தில் அவரின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் சில காலமாகவே விஷால் நல்ல ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து வெகு நாள்களாகி விட்டது. மார்க் ஆண்டனி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானாலும் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படங்களின் வாய்ப்பும் வரவில்லை. இடையில் அவருக்கு உடல் நிலையில் கோளாறு ஏற்பாடு அதுவே பெரிய செய்தியாக பேசப்பட்டது.

மதகஜராஜா பட விழாவில் பேசும் போது அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது. அது எல்லாருமே அவர் குடித்துவிட்டுத்தான் பேசுகிறார் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அவருக்கு ஏதோ பிரச்சினை என்றேதான் கூறினார்கள். இதற்கிடையில் சமீபத்தில் கூவாகத்தில் நடந்த விழாவில் திடீரென மயங்கி விழுந்தார் விஷால் . இதை பற்றி சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரிடம் கேட்ட போது மறுபடியுமா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

மறுபடியும் அவர் மயங்கி விழுந்தது எனக்கு தெரியாது என்றும் இந்த செய்திக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறினார். அவங்க அவங்க பிரச்சினையை அவர்களாகத்தான் சரிசெய்யவேண்டும். மருத்துவர்கள் சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறினார் வரலட்சுமி சரத்குமார். ஒரு காலத்தில் விஷாலும் வரலட்சுமியும் ஒன்றாக சுற்றியவர்கள். வரலட்சுமியைத்தான் விஷால் திருமணம் செய்ய போகிறார் என்றெல்லாம் கூறினார்கள்.

எல்லா நேரங்களிலும் வரலட்சுமி விஷாலுக்கு ஆதரவாகத்தான் நின்றிருக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் அப்படி என்னதான் நடந்தது என தெரியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். அதிலிருந்தே விஷால் பற்றிய கேள்வியை வரலட்சுமி தவிர்த்துதான் வருகிறார்.

Next Story