நம்மளும் ஆஸ்காருக்கு அனுப்புவோமா? 3 நிமிச பாட்டுக்கு இப்படி ஒரு புரோமோவா? டிராகன் டீமின் அட்ராசிட்டி…
Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹிட் இயக்குனர்களில் முக்கிய இடம் பிரதீப் ரங்கநாதனுக்கு உண்டு. அவர் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படமும், அவர் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படமும் ரசிகர்களிடம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் சிங்களான தி ரைஸ் ஆஃப் டிராகன் சமீபத்தில் வெளியானது. அனிருத் பாடல் விக்னேஷ் சிவன் எழுதிய வரிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இப்பாடலில் பிரதீப் ரங்கநாதனுடன் கௌதம் மேனனின் டான்ஸும் ஹிட் அடித்துள்ளது.
தற்போதைய படத்தின் வழித்துணையே சிங்கிள் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதற்கான புரோமோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. பாடல் எப்படி இருக்குமோ என்பது தெரியவில்லை ஆனால் மூணு நிமிட பாடலுக்கு இரண்டரை நிமிடத்திற்கான புரோமோ வீடியோ தான் தற்போது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த புரோமோவில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத்திடம் ஆஸ்காருக்கு படத்தை அனுப்பலாமா எனக் கேட்க ஏன்டா? மனசாட்சியை தமிழ்நாட்டிலேயே பூட்டி வச்சிட்டு வந்துட்டியா எனக் கேட்கிறார். மேலும், நம்ம படம் என்ன அமைதியா பார்த்துட்டு கைதட்டி வரவா படம் எடுக்கிறோம்.
கதற கதற என அவர் இழுக்க பிரதீப் ரங்கநாதன் கன்பார்ம். படம் ரிலீஸ் ஆனவுடன் நீங்க தான் மீம் டெம்பிளேட் என்கிறார். தொடர்ந்து நம்ம படம் நமக்கு உசத்திதான். டீரிமில் உன் ஆசையை வச்சிக்கோ என சொல்லி செல்லும் போது தான் படத்தின் பாடலுக்கான சிங்கிள் என்பதே தெரிகிறது.
வழித்துணையே எனத் தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே பாடி இருக்கின்றனர்.