சம்பவத்துக்கு ரெடியான காளி.. இனி 'NO' பேக்கப்.. மாஸாக களமிறங்கும் வீர தீர சூரன்!..
Veera Dheera Sooran: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீரதீரசூரன். சித்தா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அருண்குமார் இயக்கியிருக்கும் இது திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீசாக காத்திருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகின்றது. அதற்கு அடுத்ததாக முதல் பாகம் வெளியாக இருக்கின்றது. சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இப்படி வெளியானது கிடையாது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.
காரணம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் நடிகர் சியான் விக்ரம் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.
ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். ஆனால் நடிகர் சீயான் விக்ரம் இந்த திரைப்படத்தில் மிக மெனக்கட்டு நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் விக்ரம் இணைந்த திரைப்படம் வீரதீரசூரன். இந்த திரைப்படத்தில் காளி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இது ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரம் என கூறப்படுகின்றது.
வீர தீர சூரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அந்த சமயம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருந்த காரணத்தால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
இருப்பினும் கடைசி நேரத்தில் அவசரமாக படத்தை வெளியிட வேண்டாம் என்று யோசித்த படக்குழு தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். அதன்படி இந்த திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதே தினத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி செட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜீனி திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. எந்த திரைப்படம் வந்தாலும் மார்ச் 27ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு வீர தீர சூரன் படக்குழுவினர் முடிவு செய்கிறார்கள். இது விக்ரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. தற்போது ஜீனி திரைப்படம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.