2 நாட்களில் சம்பவம் செய்த வீர தீர சூரன்!.. சியானுக்கு இந்த படம் சூப்பர் ஹிட்டுதான்!...
Veer Dheera Sooran: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். சேது படம் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தி பின்னர் தில், தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். சேது படத்திற்கு முன்பும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.
சேது படத்திற்கு முன்:
ஆனால், அந்த படங்கள் விக்ரமுக்கு ஹிட் படங்களாக அமையவில்லை. மலையாளத்தில் ஹீரோவின் தம்பி உள்ளிட்ட சில கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். சேது படத்திற்கு பின் கோலிவுட்டில் தொடர்ந்து நடிக்க துவங்கி முக்கியமான நடிகராக மாறினார்.
அழகாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். காசி, பிதாமகன் போன்ற படங்கள் விக்ரம் எந்த மாதிரியான நடிகர் என்பதை ரசிகர்களுக்கு காட்டியது. ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த அந்நியன், ஐ போன்ற படங்களும் பேசப்பட்டது.
வீர தீர சூரன்:
தற்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
வீர தீர சூரன் பற்றி ஊடகமொன்றில் பேசிய அருண் ‘பொதுவாக ஒரு படத்தில் 60 காட்சிகள் இருக்க வேண்டும் என சொல்வார்கள். அதை இந்த படத்தில் உடைத்திருக்கிறேன். இந்த படத்தில் மொத்தமே 15 சீன்கள்தான் இருக்கும். ஒவ்வொன்றும் நீளமாக இருக்கும்’ என சொல்லி இருக்கிறார். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இதுவரை இல்லாத புதுமையாக 2ம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது.
ஒரு கோடி பேர்:
அதில் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் இடையே இருக்கும் மோதல் பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த டீசர் வீடியோவை ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த தகவலை பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.