
Cinema News
Kantara 2: ஷங்கர் சொல்லியும் கேட்காத ரிஷப் ஷெட்டி!.. கனவு படத்தை காலி செய்த காந்தாரா 2…
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்து 400 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படம் இப்படி ஒரு வசூலைப் பெற்றதை ரிஷப் ஷெட்டியே எதிர்பார்க்கவில்லை. எனவே கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருந்தார்.
Kantara ஹிட் அடித்ததால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினார். சுமார் இரண்டரை வருடங்கள் இப்படத்தின் வேலை நடந்தது. இந்த படத்திற்கு Kantara Chapter 1 என தழுப்பு வைக்கப்பட்டது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதையாக இப்படம் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
காடுகளில் வசிக்கும் மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல், முதல் பாகத்தில் வந்தது போலவே காடுகளில் வசிக்கும் மனிதர்களின் தெய்வம், அதன் சக்தி, அதோடு அதிரடியான ஆக்சன் காட்சிகள் எல்லாம் சேர்ந்து இப்படம் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஆர்ட் டைரக்ஷனும், VFX காட்சிகளும் சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். கண்டிப்பாக இப்படத்திற்கு இரண்டு அல்லது மூன்று தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்த படத்தின் துவக்கத்தில் வரும் சில காட்சிகள் வேள்பாரி நாவலை ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பண்டைய காலங்களில் காடுகளில் வசிக்கும் குழுவுக்கு ஒரு தலைவன் இருப்பான். அந்த தலைவன் அந்த மக்களுக்கு தேவையானவற்றையும், புதிதாக வரும் விஷயங்களையும் தெரிந்து கொண்டு, தங்களிடம் இருக்கும் பொருட்கள் மூலம் பண்டமாற்றம் செய்து அதை தனது மக்களுக்கு வாங்கி கொடுப்பான்.
காந்தாரா 2-வில் ரிஷப் ஷெட்டின் கதாபாத்திரம் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அப்படி பொருட்களை வாங்குவதற்காகவும், பண்டமாற்றம் செய்வதற்காகவும் நகரத்திற்கு கதாநாயகன் செல்லும்போது அங்கு கதாநாயகியை சந்திப்பான். இதுவே வேள்பரி நாவலில் இருக்கும் காட்சி. இதே காட்சி காந்தாரா 2-விலும் வருகிறது. அதேநேரம் அதன் பின்வரும் காட்சிகள் வேறு பாதையில் பயணிக்கிறது.
அனேகமாக வேள்பாரி நாவலை நன்றாக படித்த ஒருவர் காந்தாரா 2 படம் உருவானபோது கதை விவாதத்தில் பங்கேற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கும் உரிமையை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வைத்திருக்கிறார். அதோடு வேள்பாரி நாவலில் வரும் காட்சிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில்தான் காந்தாரா 2 படத்தில் வேள்பாரி நாவலில் இருந்த காட்சிகள் இடம் பெற்றிருப்பது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஷங்கர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.