கோட் படத்துல அந்த விஷயத்தை தளபதி கிட்ட சொல்லாம மறைச்ச வெங்கட்பிரபு.. உஷாருதான் ஆளு..
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி ,நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அரசியல் பிரவேசம்:
தளபதி 69 திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அதனை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து அறிவித்து இருக்கின்றார்.
மேலும் கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார். நடிகர் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அரசியல் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
கோட் திரைப்படம்:
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு , சினேகா,, லைலா மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் சில ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் 460 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் இருப்பது கோட் திரைப்படம் தான்.
வெங்கட் பிரபு பேட்டி:
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தந்தை மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருப்பார். இதில் மகன் கதாபாத்திரம் வில்லனாக காட்டப்பட்டு இருக்கும். அதுவும் இடைவெளி காட்சிக்குப் பிறகு தான் அவர் வில்லன் என்பதே தெரியவரும். முதன்முறையாக நடிகர் விஜய் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ஒப்புக்கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு இது குறித்து விளக்கம் அளித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த திரைப்படத்தின் கதையை முதலில் நான் அவரிடம் தெரிவிக்கும்போது இப்படி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் இருக்கின்றது என்பதை நான் தெரிவிக்கவில்லை.
அவரிடம் கதை சொல்லும் போது இடைவெளி காட்சி வரைக்கும் மட்டும் தான் படத்தின் கதையை விவரித்தேன். அதற்குப் பிறகு உங்களுக்கு இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரம் இருக்கின்றது என்பதை நான் கூறவில்லை. பாதி கதை கூறும்போதே அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
படத்தில் நடிக்கும் போதும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இந்த திரைப்படத்தில் கடைசியில் அவரை நல்லவராக மாற்றவும் நான் முயற்சிக்கவில்லை. படம் முடியும் வரை மகனாக இருக்கும் விஜய் கெட்டவனாகவே காட்டப்பட்டிருப்பார் என்று தெரிவித்திருந்தார்.