வெங்கட் பிரபுதான் இதில் பர்ஸ்டாம்… நீங்க கிரேட் சார்… ஆச்சரியத்தில் கோலிவுட்!..

by Akhilan |
வெங்கட் பிரபுதான் இதில் பர்ஸ்டாம்… நீங்க கிரேட் சார்… ஆச்சரியத்தில் கோலிவுட்!..
X

VenkatPrabhu: தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய படங்களில் இதுவரை யாருமே செய்யாத விஷயத்தை செய்திருப்பதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபல குடும்பத்திலிருந்து நடிகராக எண்ட்ரி கொடுத்தவர் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அது பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து ஓரளவுக்கு வரவேற்பை பெற்று இருந்தார்.

இதை தொடர்ந்து இவர் புது முக நடிகர்களை வைத்து சென்னை 28 படத்தை இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்தது. அப்படமே வெங்கட் பிரபுவை இயக்குனராக மக்கள் மத்தியில் பதிய வைத்தது. தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகளும் குவிந்தது.

இருந்தும் முன்னணி நடிகர்களை நம்பாமல் இள நடிகர்களை வைத்து அவர் இயக்கிய சரோஜா மற்றும் கோவா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி படங்களாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் அஜீத்தின் 50-வது திரைப்படத்தை இயக்கிய வெற்றி நடை போட்டார்.

அதை தொடர்ந்து பல வருட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் நடிகர் சிலம்பரசனின் கம்பேக் படமாகவும் அமைந்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியான விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் பேட்டி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட் பிரபு குறித்து மற்றொரு ஆச்சரிய தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் மட்டுமே அவர்களுடைய இயக்குனர்களால் சமீப காலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெங்கட் பிரபு தின சம்பள டேட்டா கொடுத்த முதல் இயக்குனராக மாறி இருக்கிறார் வெங்கட் பிரபு. இது குறித்த பதிவை அவருடைய தம்பியும் நடிகருமான பிரேம்ஜி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story