கடவுள் இருக்கான் குமாரு!.. கோட் வெளியாகி 25வது நாள்!. வெங்கட்பிரபு வெளியிட்ட வீடியோ...

Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் கோட். The Greatest of all time என்கிற பெயரில் இப்படம் வெளியானது. அதற்கு காரணம் கோட் என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வந்ததுதான். அஜித்துக்கு மங்காத்தா கொடுத்தவர் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறது.

அதோடு, பல வருடங்கள் கழித்து விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். மேலும், விஜய் மட்டுமில்லாமல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா என 90களில் கலக்கிய நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கு படங்களில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி நடிப்பதாக கூறினார்கள்.

குறிப்பாக இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஒரு கெட்டப்பில் விஜய் மிகவும் இளமையாக வரப்போவதாகவும், அதற்காக ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் கூறி ஹைப் ஏற்றினார் வெங்கட்பிரபு. படத்தில் தோனி நடிக்கிறார்.. அஜித் நடிக்கிறார்.. சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.. என பல தகவல்களும் வெளியானது.


எனவே, அஜித் ரசிகர்களிடமும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அனிருத் அளவுக்கு யுவன் மியூசிக் போடவில்லை என சொல்லி அவரை சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் திட்டினார்கள்.

கோட் படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேநேரம், வெங்கட்பிரபு ஒரு தீவிர ரசிகர் என்பதால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சி.எஸ்.கே அணி தொடர்பாக சில காட்சிகளை வைத்திருந்தார். இதனால், ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் அணி ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள்.

எனவே, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா பக்கம் கோட் போனி ஆகவில்லை. ஒருபக்கம், முதல் வாரம் மட்டுமே கோட் படத்திற்கு நல்ல வசூல் இருந்தது. எங்களுக்கு பெரிய லாபம் இல்லை என தியேட்டர் அதிபர்கள் பேட்டி கொடுத்தனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லி ஒரு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளார் வெங்கட்பிரபு.


Related Articles
Next Story
Share it