காத்து வாங்கும் மதராஸி டிக்கெட் புக்கிங்!.. பில்ட்ப்பா பேசியும் யூஸ் இல்லாம போச்சே!..
Madharaasi: தர்பார் திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த நான்கு வருடங்களாக எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து மதராஸி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரைய்லர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டிரைய்லரை பார்த்த போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தின் ஞாபகம் பலருக்கும் வந்தது. அந்த படத்தைப் போலவே தான் நேசித்த பெண்ணிற்காக ஒருவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது போல மதராஸி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ரக்கடு லுக்கில் சிவக்கார்த்திகேயனும் டெரராக இருந்தார். டிரெய்லரில் அசத்தலான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் இந்த படத்திலும் வில்லனாக கலக்கி இருக்கிறார். ‘எவன் கையில துப்பாக்கி இருந்தாலும் நான்தான்டா வில்லன்’ என அவருக்கு பன்ச் வசனமும் இருந்தது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் அவரைப்பற்றி எழுந்துள்ள பல விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி இருந்தார். குறிப்பாக ‘விஜய் சார் என்னிடம் துப்பாக்கியை கொடுத்ததால் என்னை திடீர் தளபதி.. அடுத்த தளபதி என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் அப்படி நினைத்திருந்தால் அவர் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்..
அதேபோல் விஜய் ரசிகர்களை நான் கவர நினைக்கிறேன் என சொல்லுகிறார்கள்.. யாருடைய ரசிகர்களையும் யாரும் பெற முடியாது’ என பேசினார். மேலும் ‘ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். அதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என விளக்கம் சொன்னார்.
இந்நிலையில் பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் டிக்கெட் முன்பதிவு துவங்கியிருக்கிறது. ஆனால் அதிர்ச்சியூட்டும் படியாக இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பல மாவட்டங்களிலும் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாக இருக்கிறது. டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கைகள் காலியாகவே இருக்கிறது. சில திரையரங்குகளில் மட்டுமே சில வரிசைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவு மிகவும் மோசமாக இருக்கிறது. மதராஸி படத்திற்கு படக்குழு எந்த புரமோசனும் செய்யவில்லை. இதுபற்றி கருத்து சொன்ன முருகதாஸ் ‘பெரிய அளவில் புரமோஷன் செய்து ஹைப் ஏற்ற விரும்பவில்லை’ என கூறினார். தற்போது அதுவே மதராஸி படத்தின் வியாபாரத்தை பாதித்துவிடுமோ என்கிற எண்ணமும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
