1. Home
  2. Cinema News

இதோடு முடிச்சுக்கிறேன்.. இனிமேல் இந்த பக்கம் வரமாட்டேன்.. கடையை சாத்திய வெற்றிமாறன்

இதோடு முடிச்சுக்கிறேன்.. இனிமேல் இந்த பக்கம் வரமாட்டேன்.. கடையை சாத்திய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணியில் இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். அவரின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் தான் ”பேட் கேர்ள்”. இந்த படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டிஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமித் த்ரிவேடி அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, அதில் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள் இச்சைகளை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அதை எப்படி பார்க்கிறாள்?.

அதை எப்படி அனுபவிக்கிறாள்? என்பதைப் பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது. இதன் டீசர் வெளியான அன்று சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதால் அதனை இணையதளத்திலிருந்து நீக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது பெண்ணியம் குறித்து பேசவில்லை, ஆனால் அதற்கு பதிலாக தேவையற்ற ஆபாச காட்சிகள் நிறைந்து இருப்பதாக அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த படத்தின் மீது வழக்கு தொடர்ந்து நடந்து வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் பல தடைகளும் வந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த‌ வெற்றிமாறன் ”நான் பேட் கேர்ள் திரைப்படத்துடன் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடி விடுவேன் திரைப்படத்தின் வணிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது” என்று கூறியுள்ளார். இவர் நடத்தி வரும் ’கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ பல இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஒரு தயாரிப்பாளராக தான் மிகவும் அவஸ்தைப்பட்டு வருவதாகவும் இதனால் இனி எந்த படங்களையும் நான் தயாரிக்கப் போவதில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். இவர் இப்படி கூறியிருப்பது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.