என்னய்யா இவரு ரிலீஸ்க்கு முதல் நாள் வரைக்கும் படத்த எடுத்திருக்காரு!.. இருந்தாலும் இது ஓவரு!..
இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். தான் இயக்கிய ஏழு திரைப்படங்களில் ஒரு திரைப்படத்திற்கு கூட தோல்வியை சந்திக்காதவர். இவரின் படங்கள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக படம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனுக்காகவே திரையரங்குக்கு சென்ற படம் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு தனது கதைக்களத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய ஒரு இயக்குனர்.
விடுதலை திரைப்படம்:
இவர் கடந்த ஆண்டு நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக விடுதலை திரைப்படத்தின் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வந்தது. இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படத்தில் விஜய் சேதுபதியின் அரசியல் வசனங்கள் சற்று தொய்வை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறியிருந்தார்கள். மற்றபடி படம் வெற்றிமாறன் ஸ்டைலில் தரமாக இருக்கின்றது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
படத்தின் வசூல்:
நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் மட்டும் 7 கோடி ரூபாயும் இந்தியா முழுவதும் சேர்த்து 8 கோடி ரூபாயும் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கின்றது. வரும் நாட்கள் வார நாட்கள் என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறனின் சின்சியாரிட்டி:
பொதுவாக வெற்றிமாறன் தனது திரைப்படங்களை மிகவும் ஸ்லோவாக எடுப்பார். இது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தை முதல் நாள் வரைக்கும் கரக்ஷன் செய்து மாற்றி இருக்கின்றார். படம் வெளியீட்டுக்கு முன்னதாக படத்தில் இருந்து எட்டு நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாக அறிவித்திருந்தார்.
தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்த வெற்றிமாறன் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் வரைக்கும் விஜய் சேதுபதியை டப்பிங் பேச வைத்ததாக கூறியிருக்கின்றார். அதிலும் அவசர அவசரமாக இரவு 12 மணிக்கு போன் செய்து அழைத்து இதற்கு மட்டும் டப்பிங் பேசிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.
அதிலும் நடிகர் சூரி சென்னையில் இல்லை. திருச்சியில் இருந்ததால் திருச்சியில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கே அந்த காட்சிகளை அனுப்பி டப்பிங் பேசி கொடுக்க சொல்லி கூறி இருக்கின்றார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் வரைக்குமா படம் எடுப்பீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Also Read : சங்கர் கணேஷ் கல்யாணத்துக்கு வந்த சிக்கல்... எம்ஜிஆரும், சிவாஜியும் நடத்திய அற்புதம்