விடுதலை 2 பார்ட்டுக்கே தாங்கல.. வாடிவாசல் இத்தனை பாகமா?.. அப்ப நம்ம சூர்யா நிலைமை!..
இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக படம் எடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தொடர்ந்து ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை, விடுதலை மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இவர் இயக்கிய திரைப்படங்களில் விடுதலை 2 திரைப்படம் தான் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சற்று அடிவாங்கி இருக்கின்றது.
விடுதலை 2: கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது. விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட அரசியல் வசனங்கள் இருப்பதால் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.
வாடிவாசல்: விடுதலை திரைப்படத்தின் பாகங்களை முடித்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் அறிவிப்பு பல வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் படம் டேக் ஆப் ஆகாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்குவதற்கு சென்றதால் கடந்த மூன்று வருடத்தையும் விடுதலை திரைப்படத்தின் பாகங்களை இயக்குவதற்கே செலவழித்து விட்டார்.
அடுத்ததாக நிச்சயம் வாடிவாசல் திரைப்படத்தை தான் இயக்கப் போகின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அதை முடித்த கையோடு வாடிவாசல் திரைப்படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகின்றது.
வாடிவாசல் 3 பாகம்: வாடிவாசல் திரைப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதாவது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் கூறப்படுகின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் அதையும் தாண்டி இதில் சில உள்ளூர் அரசியல்களை எடுத்துக் கூறும் விதமாக கதை அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை மூன்று பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. ஆரம்பித்த பிறகு படத்தை பிரிக்காமல் முதலிலேயே இப்படத்தை மூன்று பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்களாம். அதற்கு ஏற்றது போல் படத்தின் கதையை தற்போது தயார் செய்து வைத்திருக்கின்றாராம் இயக்குனர் வெற்றிமாறன்.
விடுதலை திரைப்படத்தின் பாகங்களை எடுத்து முடிப்பதற்கு மூன்று வருடத்தை எடுத்துக் கொண்டார் வெற்றிமாறன். இப்படி இருக்கையில் வாடிவாசல் திரைப்படத்திற்கு மூன்று பாகங்கள் என்றால் எத்தனை ஆண்டுகள் எடுப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதையெல்லாம் தாண்டி நடிகர் சூர்யாவின் நிலைமை என்ன ஆவது என்பதுதான் பலரின் கவலையாக இருக்கின்றது.