STR 49: சூட்டிங்கும் ஆரம்பிக்கல! எதுவும் நடக்கல.. STR49 ஹைப்பை குறைங்கப்பா..
STR 49: தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி - கமல், அஜித் - விஜய் என இரட்டையர்களாக கொண்டாடி வருகின்றோமோ அதே வரிசையில் அடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இரட்டையர்கள் சிம்பு - தனுஷ். சிம்புவை விட தனுஷ் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கைத்தேர்ந்த நடிகராக இருந்தாலும் இவர்கள் ரசிகர்கள் சிம்புவையும் தனுஷையும் ஒரு சிறப்பான இடத்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்கள்.
சிம்பு தனுஷை வைத்து படம் பண்ணப் போகும் வெற்றிமாறன்:
இவர்களை பற்றி சமீபகாலமாக பல செய்திகள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. சிம்புவை வைத்தும் ஒரு படமும் தனுஷை வைத்து இன்னொரு படமும் எடுக்கப்போவதாக வெற்றிமாறன் ஒரு பேட்டியில் உறுதிபடுத்தியிருக்கிறார். ஏற்கனவே சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி என்றதுமே ரசிகர்ளுக்கு உற்சாகம். அது சிம்புவின் 49வது படமாக அமையப் போகிறது.
இன்னொரு பக்கம் சிம்புவுக்கு ஒரு மாஸ் வெற்றியும் தேவைப்படுகிறது. மாநாடு படத்திற்கு பிறகு சிறப்பான கம்பேக்கை கொடுத்தார் சிம்பு. அதுவரை சிம்புவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அதாவது
- சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரமாட்டார்.
- இரவில் படப்பிடிப்பு என்றால் அதை முற்றிலும் தவிர்த்துவிடுவார்
- ஆட்டியூட் காட்டக்கூடிய நடிகர்
- ஒழுங்கான ஒத்துழைப்பையும் கொடுக்கமாட்டார்
என்றெல்லாம் விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக வந்து நின்றார் சிம்பு. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தனது எடையை குறைத்தார் என்பதை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகுதான் ஈஸ்வரன் படத்தில் மிகவும் ஒல்லியாக தோன்றி நடித்தார் சிம்பு.
வரிசையாக மாஸ் காட்டிய சிம்பு:
ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து லட்டு போன்ற ஒரு வாய்ப்பாக அவருக்கு அமைந்தது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து சிம்புவுக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் வெற்றியாக அந்தப் படம் அமைந்தது. 100 கோடி கிளப்பிலும் அந்தப் படம் இணைந்தது. அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அவருடைய நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.
பத்துதல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அந்தப் படம் டிராப் ஆனது. அதன் பிறகுதான் தக் லைஃப் படத்தில் நடித்தார். அதில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நேரத்தில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது.
சிம்பு வெற்றிமாறன் கூட்டணிக்கு ஏன் இப்படி வரவேற்பு?
- இருவருமே தனிதனி நிலையில் பிரபலமாக இருந்தாலும் இவர்கள் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகிறது.
- வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ஆழமான கருத்தை சொல்லும் படமாகவே இருந்திருக்கின்றன. குறிப்பாக இசை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இவர்க்ள் இருவரும் இணைந்தால் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பது நம்பிக்கை
இந்த நிலையில் சிம்பு வெற்றிமாறன் இணையும் படம் பற்றி பல கருத்துக்கள் வதந்திகள் வெளியானாலும் தற்போது வெற்றிமாறன் இந்தப் படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது இந்தப் படத்தின் டிஸ்கஷன் தான் இப்போது போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா வேலைகளும் முடிந்த பிறகு படத்தை பற்றிய அப்டேட் மற்றும் ப்ரோமோ வீடியோ ஆகியவை வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.
புலம்பும் ரசிகர்கள்:
இதை பார்த்த ரசிகர்கள், இன்னும் டிஸ்கஷனே முடியவில்லையா? எப்போ முடிந்து படப்பிடிப்பை ஆரம்பித்து போஸ்ட் புரடக்ஷன் எல்லா வேலைகளையும் முடித்து படம் எப்போ ரிலீஸ் ஆகுவது? சிம்பு நடிப்பில் ஒரு தரமான ஆக்ஷன் படத்தை பார்த்துவிடலாம் என்று நினைத்தால் அது இப்போ முடியாது போலயே என்றும் கூறி வருகிறார்கள்.
