20 கோடி பணம் போச்சே!.. 2 படங்களில் மாட்டிகொண்டு தவிக்கும் வெற்றிமாறன்….
Vetrimaran: இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் வெற்றிமாறன். தனுசை வைத்து இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஆச்சரியப்படவைத்தார். அடுத்து மீண்டும் தனுசை வைத்து ஆடுகளம் என்கிற படத்தை இயக்குகினார். இந்த படம் வெற்றிமாறன் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை எல்லோருக்கும் காட்டியது. இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கு கிடைத்தது.
அதன் பின் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கி முக்கியமான இயக்குனராக மாறினார் வெற்றிமாறன். அவரின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு, ஹிந்தி சினிமா நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.
சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் டேக் ஆப் ஆகாத நிலையில் சிம்புவை வைத்து வடசென்னை தொடர்பான ஒரு கதையை உருவாக்கி படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் அந்த படமும் அப்படியே நிற்கிறது.
ஒரு பக்கம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன். அறம் படத்தை இயக்கிய கோபி நாயனார் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய இடத்தில் நடித்த மனுஷி என்கிற படம் உருவானது. அதேபோல் வெற்றிமாறனின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கிய பேட் கேர்ள் என்கிற படம் சென்சாரில் சிக்கி வெளிவராமல் இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுமே சர்ச்சைகளை உருவாக்குவதாக சென்சார் போர்டு தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் 20 கோடிகளை முதலீடு செய்திருக்கிறார் வெற்றிமாறன். எனவே ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதில் பேட் கேர்ள் திரைப்படத்தை செப்டம்பர் மாதம் எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்.
