வாடிவாசல் எப்ப ஆரம்பிக்கும்?!. அட்வான்ஸை திருப்பி கொடுக்கும் வெற்றிமாறன்!...

Vaadivaasal: தனுஷை வைத்து பொல்லாதவன் என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து இயக்குனர்களுக்கே பிடிக்கும் இயக்குனராக மாறினார். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடித்து ஆடினார்.
நாவல்களை வைத்து சினிமா: நல்ல நாவல்களை சிறந்த திரைப்படமாக எடுப்பது இவரின் ஸ்பெஷல். ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருது வாங்கினார். இவர் எடுத்த வட சென்னை திரைப்படம் இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினரை எப்படி நடத்துகிறார்கள் என தனது அசுரன் படத்தில் காட்டியிந்தார்.
தனுஷுக்கு தேசிய விருது: இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது வாங்கினார் தனுஷ். தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சூரியை விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக மாற்றினார். அதன்பின் பல படங்களிலும் கதையின் நாயகனாக நடிக்க துவங்கிவிட்டார் சூரி.
சூரியும், விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விடுதலை படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் விடுதலை 2 படத்தை எடுத்து வந்தார். ஒரு வருடத்திற்கும் மேல் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். ஒருபக்கம், சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் எப்போது துவங்குவார் என்கிற கேள்வி பல வருடங்களாக ரசிகர்களிடம் இருக்கிறது.
சூர்யாவுடன் வாடிவாசல்: ஏனெனில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை வாங்கி சூர்யா பயிற்சி எடுக்கும் புகைப்படங்களும் வெளியானது. ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. விடுதலை மற்றும் விடுதலை 2 என இரண்டு படங்களை முடிக்கவே வெற்றிமாறனுக்கு 4 வருடங்கள் முடிந்துவிட்டது.
வாங்கிய அட்வான்ஸ்: ஒருபக்கம், புஷ்பா, புஷ்பா 2, குட் பேட் அக்லி போன்ற படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கியிருந்தார் வெற்றிமாறன். ஆனால், வாடிவாசலே எப்போது துவங்கி முடியும் என்பது தெரியாததால் அந்த அட்வான்ஸை அந்த நிறுவனத்திடமே திருப்பி கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் வெற்றிமாறன். எப்படியும் அடுத்து வாடிவாசல் படத்தைத்தான் வெற்றிமாறன் எடுப்பார் என்கிற நம்பிக்கையில் சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.