சிம்புவால் வந்த சிக்கல்!.. ப்ரமோ ஷூட்டுக்கே இவ்வளவு நாளா?!.. ரெண்டு பேரும் குட் காம்பினேஷன்!..

Vetrimaran simbu: சிம்பு எப்படிப்பட்ட நடிகர் என்பது திரையுலகில் எல்லோருக்கும் தெரியும். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார். காலை 7 மணிக்கு வர சொன்னால் 11 மணிக்கு போவார். சில நாட்கள் அதுவும் போகாமால் வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பார். இதனால்தான் இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். கேட்டால் நான் சரியான நேரத்திற்கு வந்தாலும் இயக்குனர்கள் சீக்கிரம் வருவதில்லை என விளக்கம் சொன்னார்.
ஆனாலும், அவ்வப்போது ஒரு ஹிட் கொடுத்துவிடுவதால் இவரின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மாநாடு படத்திற்கு பின் இவருக்கு ஹிட் படம் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த தக் லைப் படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. அடுத்து பார்க்கிங் பட இயக்குனருடன் ஒரு படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என 3 படங்களை வைத்திருந்தார்.
இப்போது பார்க்கிங் பட இயக்குனரை விட்டுவிட்டு வெற்றிமாறனிடம் கை கோர்த்திருக்கிறார். வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் என்றாலும் இவரிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஒரு கதையை எழுதி ஷூட்டிங் போவார். சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். திடீரென அவருக்கு வேறு ஒன்று தோன்றும். கதையை மாற்றுவார். அதுவரை எடுத்தது எல்லாமே வேஸ்ட். மீண்டும் முதலில் இருந்து படப்பிடிப்பு நடத்துவார்.

இப்படித்தான் விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களை 3 வருடங்கள் எடுத்தார். விடுதலை படத்தில் நடிக்க வரும்போது விஜய் சேதுபதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் பல நாட்கள் நடிக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது சிம்புவை வைத்து வட சென்னை பின்னணியில் ஒரு படத்தை இயக்கி திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்திற்கான புரமோ ஷூட் பணிகள் போன வாரமே நடந்தது. சிம்புவுக்கு 2 கெட்டப்புகள் என்பதால் முதலில் இளமையான சிம்புவை வைத்து சில நாட்கள் எடுத்தார். அடுத்தது கொஞ்சம் வயதான வேடத்தில் சிம்புவை வைத்து எடுக்க வேண்டும். அதற்கான ஷூட் நேற்று துவங்கியது. ஆனால், சிம்புவுக்கு சளி பிடித்துவிட்டதால் அவர் ஷூட்டிங் வரவில்லை. எனவே, ஷூட்டிங் மீண்டும் எப்போதும் துவங்கும் என தெரியவில்லை.