‘லப்பர் பந்து’ பாத்துட்டு இரிடேட்டான வெற்றிமாறன்! படத்த பாத்து இல்ல.. அந்த நடிகர பார்த்து

கடந்த வாரம் ரிலீஸாகி மக்களின் பேராதரவை பெற்ற படமாக லப்பர் பந்து திரைப்படம் அமைந்தது. அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது. குடும்பத்தை விட கிரிக்கெட் தான் முக்கியம் என கருதும் அட்டகத்தி தினேஷ் , சொந்த கிராமத்தாலேயே சாதியை காரணம் காட்டி ஒதுக்கப்பட கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட வரும் ஹரீஸ் கல்யாண்.

இப்படி கிரிக்கெட்டை விரும்பும் இருவரும் ஒரு கட்டத்தில் நேருக்க நேர் மோதும் சந்தர்ப்பம் அமைய அதன் பின் என்னானது என்பதுதான் கதை. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக ஸ்வஸ்திகா மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தில் ஹரீஸ் கல்யாணுக்கு மாமனராக நடித்திருப்பார். ஆனால் நடிப்பில் பட்டைய கிளப்பியிருக்கிறார் அட்டகத்தி தினேஷ். கடந்த வாரம் ரிலீஸ் ஆன 7 திரைப்படங்களில் லப்பர் பந்து திரைப்படம்தான் ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து விஜய்டிவி பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார். லப்பர் பந்து படத்தை வெற்றிமாறன் , மாரி செல்வராஜ் போன்ற பல முக்கிய இயக்குனர்கள் அனைவரும் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனும் படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார்.

இதில் விஜய்டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பல வகையான குரல்களில் மிமிக்ரி செய்து சிரிக்கவைத்தவர் டி.எஸ்.கே. இவர் லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பார். வெற்றிமாறன் படத்தை பார்த்த பிறகு டி.எஸ்.கேவிடம் நன்றாக நடித்திருக்கிறாய். ஆனால் படத்தில் பார்க்கும் போது இரிடேட் பண்ணிட்ட என்று சொன்னாராம்.




இதை பற்றி டி.எஸ்.கே. கூறும் போது வெற்றிமாறன் இப்படி சொன்னது பெரிய விருதே கிடைத்த மாதிரி என கூறினார். அதுவும் விஜய் டிவியில் சிரிக்கவே வைத்த நீங்கள் இந்தப் படத்தில் எரிச்சலடைய வைத்திருக்கிறீர்கள் என ரசிகர்களும் கூறினார்களாம்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it