களைக்கட்டும் வேட்டையன் ஆடியோ ரிலீஸ்… இவர் மிஸ்ஸிங்காம்… பக்கா சுவாரஸ்ய அப்டேட்கள்!

Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடக்க இருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் முதற்கட்ட அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வில்லனாக நடிகர் ராணா டகுபதி நடித்திருக்கிறார். முக்கிய இடத்தில் அமிதாப்பச்சன் இப்படத்தில் இணைந்து இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர், மகனாக பகத் பாசில் நடித்திருக்கிறார். மேலும் பல முக்கிய இடங்களில் துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்க டிஜே ஞானவேல் படத்தை தயாரித்திருக்கிறார்.

வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடக்க இருக்கிறது. இன்று காலையில் வேட்டையன் படத்தின் மற்றொரு சிங்கிள் பாடலும், டீசரும் வெளியானது. மேலும் பிரபலங்களின் கேரக்டர் குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் ஆடியோ வெளியீட்டு ரஜினி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஆனால் படத்தில் நடித்த அமிதாப்பச்சன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அது போல கடந்த சில படங்களாக ரஜினிகாந்த் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் வேட்டையன் திரைப்பட விழாவில் அவரின் பேச்சிற்காக ரசிகர்கள் ஒரு பக்கம் காத்திருக்கின்றனர். வழக்கம்போல அனிருத் லைவ் பெர்பார்மன்ஸ் பண்ண இருக்கிறார். மேலும் பல முக்கிய விஷயங்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாக இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

Related Articles
Next Story
Share it