லியோ படத்தை அப்பட்டமாக காப்பி அடித்த வேட்டையன் குழு… அப்போ திட்டம் இதானா?
Leo: தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு துருவங்களாக மாறி உள்ளனர் ரஜினிகாந்த் மற்றும் விஜய். இவர்கள் தங்களுக்குள் போட்டியை அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும் ரசிகர்கள் ஒவ்வொருக்கொருவர் மோதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இது வாரிசு திரைப்பட விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசிய பின்னரே பற்றி எரிய தொடங்கியது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் திரைப்பட விழாவில் காக்கா மற்றும் கழுகு கதையை கூற விஷயம் பரபரப்பானது.
ஒவ்வொரு பிரபலங்களும் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருக்கு மாற்றி மாற்றி தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர் அதை தொடர்ந்து லியோ திரைப்பட விழாவில் விஜய் ஒரே சூப்பர் ஸ்டார் தான் என இந்த பேச்சிற்கு முடிவு கட்டினார். இதை தொடர்ந்து ரசிகர்களும் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இருந்தும் இருவரின் படத்தின் ரிலீஸ் என்பது இன்னொருவர் படங்களை ஒப்பிட்டு சண்டையிட்டுக் கொள்வது தற்போது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் வெளியான கோட் திரைப்படத்தின் போது ஜெயிலர் திரைப்படத்தை வைத்து ஒப்பிட்டு ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது.
அதுபோல தற்போது கோட் மற்றும் வேட்டையனை வைத்து ரசிகர்கள் கலாய்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இன்னொரு ஆச்சரிய தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே சரஸ்வதி பூஜை விடுமுறை தான் லியோ திரைப்படம் வெளியானது.
மற்ற படங்களை விட லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. தற்போது வேட்டையன் திரைப்படமும் இதே பூஜை விடுமுறையில் வந்துள்ளதால் லியோ திரைப்படத்தின் சாதனைகளை முறியடிக்குமா என்ன ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டியில் வேட்டையன் வெல்லுமா என்பதை பொறுத்ததுதான் பார்க்க வேண்டும்.