வேட்டையன் படத்தில் தமிழ் பேசும் அமிதாப் பச்சன்… செமையா இருக்குமே!.. வேற லெவல் போங்கோ!..

Vettaiyan: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன் கேரக்டரில் தமிழ் டப்பிங் படக் குழு செய்திருக்கும் விஷயம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட மல்டி ஸ்டார் பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து சொல்லும் படம் வேண்டாம். கமர்சியல் படமாக வேண்டும் என ஞானவேலிடம் கேட்டு வாங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனால் இப்படம் ரஜினிகாந்த் ஸ்டைலில் இருக்கும் என்றே நம்பப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தைப் போல இப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார். என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் அமிதாப்பச்சன் நேரடி தமிழ் படத்தில் முதல்முறையாக நடிக்க இருக்கிறார். இதனால் அவருடைய வேடத்தில் எந்தவித குளறுபடிகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் படக்குழு தெளிவாக இருக்கின்றனர். இப்படத்தில் தமிழ் பதிப்பில் அமிதாப்பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டப்பிங் கொடுத்திருக்கிறார்.

ஆனால் ட்ரெய்லரில் அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது படக்குழு அமிதாபின் ஒரிஜினல் வாய்ஸ் உடன் செய்து இப்படத்தில் சேர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக கோலிவுட்டில் மறைந்த பாடல்களின் ஏஐ வாய்சை பயன்படுத்தி பாடலை வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் வேட்டையன் படத்தில் தமிழ் பேசும் அமிதாப் பச்சன்… செமையா இருக்குமே!.. வேற லெவல் போங்கோ!..மறைந்த பாடகி பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it