உடும்புப்பிடியாகப் பிடித்த ரஜினி... செய்வதறியாது திகைத்த ஞானவேல்... நடந்தது இதுதான்..!

by sankaran |   ( Updated:2024-10-23 02:31:06  )
rajni gnanavel
X

சமீபத்தில் ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டவில்லை. படம் ஜெயிலர், கோட் படத்தின் வசூலை முறியடிக்கும்னு எல்லாம் சொன்னாங்க.

ஆனா எந்தப் படத்தின் வசூலையும் நெருங்கக்கூட முடியவில்லை. ஏன் இந்தளவு படம் ஆகிவிட்டது? இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கிறது. ரஜினியின் படம் அக்டோபர் 10ல் வருகிறது என்பதற்காக தன்னோட படத்தை நவம்பர் 14ம் தேதி ரிலீஸ்சுக்கு சூர்யா தள்ளி வைத்துள்ளார்.

படத்திற்கு அனிருத் தான் மியூசிக். மனசிலாயோ பாடலும் ஹிட். அப்படி இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லைன்னு சொல்றாங்களே அதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்.

வேட்டையன் படத்தோட மாறுபட்ட விமர்சனத்துக்கு என்ன காரணம் தெரியுமா? இதற்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் ஒரு தகவலைச் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா...

அக்டோபர் 10ம் தேதி படம் கண்டிப்பா வரணும்னு ரஜினி சொல்லிட்டாரு. அவரோட பேச்சைத் தட்ட முடியாது. அதனால த.செ.ஞானவேல் அவசரம் அவசரமாக அந்தப் படத்தோட வேலையை ஒரு 7 நிறுவனங்களுக்குப் பிரிச்சிக் கொடுக்கிறாரு.


ஞானவேல் என்ன நினைச்சாரோ அது மாதிரி அவரைக் கொஞ்சம் ப்ரீயா விட்டுருந்தா தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகியிருந்தா கூட பரவாயில்லை. இதைவிடக் கொஞ்சம் பெட்டரான படமா கூட வந்துருக்கும். நடுவுல ரஜினி நிறைய நுழைஞ்சி ஞானவேல் நினைச்ச படத்தையே அவரால எடுக்க முடியல.

அவரு எழுதிக்கொடுத்த டயலாக்கையே ரஜினி பேச மறுத்துடறாரு. கிளைமாக்ஸ் கூட ரஜினி சொன்னது தான். அதை எல்லாம் தெரிஞ்சி தான் ஞானவேல் வெளியில சொல்ல முடியாம இருக்காரே தவிர அவர் விருப்பப்படி எடுக்கட்டும்னு விட்டுருந்தா இன்னொரு ஜெய்பீம் மாதிரி படம் வந்துருக்கும்.

படம் ஓடாம போனதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு மழை. இன்னொன்னு விஜய் ரசிகர்கள். படம் ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது. இடைவேளை வரைக்கும் ரொம்ப நல்லாவே இருந்துச்சு. அப்புறம் சுமாராப் போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story