வேட்டையன் பண்ண சாதனை! ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படியா?..

Vettaiyan: ரஜினி நடிப்பில் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் திரைப்படம் வேட்டையன். த. ச. ஞானவேல் இயக்கத்தில் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. படத்தில் ரஜினிக்கு மனைவியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார். கூடவே அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. நாளை பெரிய அளவில் இந்தப் படத்திற்கான ஆடியோ விழா சென்னையில் நடைபெறும் நிலையில் படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் ரஜினி மற்றும் அமிதாப் கேரக்டரின் பெயர்கள்தான் வெளியிடவில்லை.

அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் கேரக்டர் பெயர்களையும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் மனசிலாயோ பாடல் வெளியாகி அனைவரையும் ஆட வைத்திருக்கிறது. பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் பாடல்கள் வெளியாகும் போது அதில் சிக்னேச்சர் ஸ்டெப் என ஒன்று இருக்கும்.

அதை அனைவரும் எடுத்து ரீல்ஸ்களாக போடுவார்கள். அதே மாதிரி இந்த மனசிலாயோ பாடலிலும் மஞ்சுவாரியார், ரஜினி, ரக்‌ஷன் ஆகியோர் ஒன்று போல் ஆடும் அந்த ஸ்டெப் தான் இன்று வைரலாகி வருகின்றது. அந்த ஸ்டெப்பைத்தான் அனைவரும் ரிலீஸ்களாக போட்டு சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

இதில் இன்ஸ்டாவில் அதிகம் பேர் ரீல்ஸ் போட்ட பாடலாக மனசிலாயோ பாடல் அமைந்திருப்பதாக பத்திரிக்கையாளர் எஸ்.சங்கர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் வேட்டையன் படம் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் அடுத்த சிங்கிளுக்கான ஒரு அப்டேட்டை அனிருத் சமீபத்தில் ஒரு வீடியோவாக கொடுத்திருந்தார்,

அதில் சூப்பர் ஸ்டார் பவர் யாருடா மாதிரி ஒரு பெப் பாடலாக அமைந்திருக்கிறது. அந்த வீடியோவும் அதிகம் பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். வேட்டையன் படம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் லைக்காவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு உணர்வு வந்துவிடும். கடனில் சிக்கி தவிக்கும் லைக்கா வேட்டையன் படத்தை நம்பித்தான் இருக்கிறது.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it