ஸ்டைலா!. கெத்தா!. திரிஷாவுடன் நிற்கும் அஜித்!.. விடாமுயற்சி முக்கிய அப்டேட்!...

by Murugan |
ajith
X

ajith

Vidaamuyarchi: அஜித் எப்போதும் ஆணழகன்தான். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டானார்கள். இப்போது வரை அது தொடர்கிறது. 90களில் காதல் மன்னன் படத்தில் நடிக்கும்போதெல்லாம் ஹேண்ட்சம் லுக்கில் பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் அஜித்.

அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த ஷாலினி மீது அஜித்துக்கு காதல் வர அது திருமணத்தில் முடிந்தது. இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு அதிக கார் ரேஸ்களில் கலந்து கொண்டார் அஜித். அப்போது சில விபத்துக்கள் ஏற்பட்டு அவரின் முதுகில் 20 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நாம் இனிமேல் சினிமாவில் நடிக்க முடியுமா என அஜித்தே கலங்கும் அளவுக்கு பலமுறை மருத்துவமனையில் இருந்திருக்கிறார் ஆனால், அதையெல்லாம் தாண்டி அவரின் எண்ணங்களும், ஆசைகளும் அவரை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறது. இன்னமும் பைக் ஓட்டுவதையும், கார் ரேஸில் கலந்து கொள்வதையும் அவர் விடவில்லை.


முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் நிறைய ஸ்டிராய்டு மாத்திரைகளை உட்கொண்டார். இதனால், அவரின் உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். அந்த தோற்றத்தில்தான் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ஏதேனும் ஒரு படத்திற்காக வொர்க் அவுட் செய்து உடலை குறைத்தாலும் சில மாதங்களில் மீண்டும் வெயிட் போட்டு விடுவார்.

இது அஜித்தின் உடல்நிலை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், இது புரியாதவர்கள் அவரை பாடி சேமிங் செய்வதும் நடந்து வருகிறது. வலிமை படத்தில் ‘அஜித் பஜன்லால் சேட்டு போல இருக்கிறார்’ என கிண்டலடித்தார் புளூசட்ட மாறன். ஆனால், இதையெல்லாம் அஜித் கண்டுகொள்வதில்லை.


இந்நிலையில்தான், இப்போது உடல்நிலையை குறைத்து ஸ்லிம்மாக மாறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே நேற்று ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த சில புகைப்படங்கள் வைரலான நிலையில், இன்று விடாமுயற்சி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில், ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் கருப்பு கோட் சூட் மற்றும் கண்ணாடி அணிந்து ஸ்டைலான லுக்கில் இருக்கிறார் அஜித். அழகான புடவையில் க்யூட்டாக திரிஷா நிற்கும் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், அதே லுக்கில் திரிஷாவுடன் கை கோர்த்து அஜித் நடந்து செல்வது போன்ற புகைப்படமும் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith trisha

அஜித், திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று துவங்கியிருக்கிறது. அங்கு இன்னும் 6 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அதோடு முழுபடப்பிடிப்பும் முடிவடைகிறது. அதன்பின் இறுதிக்கட்ட பணியில் படக்குழு ஈடுபடவுள்ளது. எனெனில், ஜனவரி மாதம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story