அஜித் படத்துல இத்தனை கெட்ட வார்த்தையா?.. விடாமுயற்சி படத்தின் சென்சார் ரிப்போர்ட்!..

by Ramya |
ajith
X

Vidamuyarchi: அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான். துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. கடந்த 2 வருடங்களாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இதில் நடிகர் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பல்வேறு தடைகளுக்கு பிறகு படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லைக்கா நிறுவனம் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவில்லை என்கின்ற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் கமிட்டான குட் பேட் அக்லி வெளியீட்டு தேதியை கூட படக்குழுவினர் அறிவித்துவிட்டார்கள். அந்த வகையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் மட்டும் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கின்றது.


இதற்கிடையில் படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகின்றது. படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் சென்சார் செய்யப்பட்டிருக்கின்றது. படத்தைப் பார்த்த சென்சார் பட குழுவினர் U /A சான்று வழங்கியிருக்கிறார்கள்.

மேலும் சில இடங்களில் மியூட் செய்யப்பட்டு சென்சார் குழு அறிவித்து இருக்கின்றது. படத்தில் கிட்டத்தட்ட 5 இடங்களில் சென்சார் குழு மியூட் செய்திருக்கின்றது. இந்த ரிப்போர்ட் தற்போது இணையதள பக்கங்களில் வெளியாகி இருக்கின்றது. மேலும் விடாமுயற்சி நேற்று திரைப்படத்தின் மொத்த நேரம் 2 மணி 34 நிமிடங்கள். மேலும் படத்தின் ரன் டைம் சரியாக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாகவே இருக்கின்றது.


நிச்சயம் இது ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அஜித் திரைப்படத்தில் அதிக இடங்களில் கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டு அதற்கு மியூட் போடப்பட்டிருக்கின்றது. படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் தயவு செய்து படத்தின் ரிலீஸ் செய்தியை வெளியிடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். தற்போது சென்சார் முடிவடைந்துள்ளதால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story