விடாமுயற்சி வர நாள்தான் பண்டிகை... அஜித்தின் ஓவர் கான்பிடன்ஸ்... மகிழ் திருமேனி சம்பவம்...
Vidaamuyarchi: நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகி இருக்கும் நிலையில், அப்படத்தில் நடந்த விஷயங்கள் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்து இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.
இப்படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஹாலிவுட்டின் பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ரீமேக்கிற்காக 100 கோடி இழப்பீடு கேட்டனர். இதனால், விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் அதிகாரப்பூர்வமாக தள்ளி வைக்கப்பட்டது.
அஜித்குமார் படத்தினை முடித்த கையோடு அவர் ரேஸிற்கு சென்றுவிட்டார். தற்போது விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்திருக்கும் பேட்டி வைரலாக பரவி வருகிறது.
அவர் பேசும்போது, ரேஸிங்கில் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கும். அதனால்தான் நான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தினை முடித்து கொடுத்துவிட்டு செல்கிறேன். அப்போதுதான் என்னால் 100 சதவீதம் ஆக்ஸலேட்டரை மிதிக்க முடியும். எங்களுக்கு பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்ய ஆசை.
ஆனால் அது நடக்காமல் போனதுக்கு வருத்தம் இருந்தது. அப்போ அஜித் சார் வருத்தப்படாதீங்க. நம்ம பண்டிகை நாள்ல வரணும்னு இல்ல. நாம வர நாளே பண்டிகைதான். நாம ரெண்டு பேரும் இன்னும் நிறைய படம் ஒன்னா செய்ய போறோம். இதைதான் நான் சிவாவுக்கும், ஹெச்.வினோத்துக்கு சொன்னேன் என்றார்.
என்னை பற்றியும், அஜித் சாரை பற்றியும் தவறாக பேசும் சமயத்தில் எங்களுக்குள்ளான பாண்டிங் அதிகரித்து இருக்கிறது. இப்படம் எங்கள் கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெறும். கண்டிப்பாக நாங்கள் நினைச்சதை விட அதிக அளவு வந்து இருக்கிறது. எனக்கும், அஜித்கும் சண்டை என நிரூபித்தால் சினிமாவை விட்டு போக தயார் எனக் கூறி இருக்கிறார்.