படத்துல எல்லாமே பைத்தியங்களா இருக்கு!.. எதுக்கு இந்த படம்?.. கொந்தளித்து பதிவிட்ட ரசிகர்..!

by Ramya |
ajith
X

Vidamuyarchi: அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் இன்று உலகம் எங்கும் ரிலீஸ்-ஆகி இருக்கின்றது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார்.

விடாமுயற்சி ரிலீஸ்: பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன் பிறகு பிப்ரவரி 6ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என அனைத்தும் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.


விடாமுயற்சி விமர்சனம் : விடாமுயற்சி திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு போடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல வகையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

அஜித் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்தாலும் பொதுமக்கள் வழக்கமான அஜித் திரைப்படம் மாதிரி இல்லை என்றும், இரண்டாவது பாதி ஸ்லோவாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். வரும் நாட்களில் படத்தின் உண்மையான விமர்சனம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க சினிமா விமர்சகர்கள் சிலர் படத்திற்கு பாசிட்டிவான மற்றும் நெகட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

கொந்தளித்த ரசிகர்: இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு ரசிகர் படம் குறித்து தாறுமாறாக விமர்சித்து பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் படத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரர்கள் என்பது போல் கூறி இருக்கிறார்கள். படத்தில் உள்ள மொத்த பைத்தியத்தையும் பார்க்கும்போது நமக்கே பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கின்றது.


விடாமுயற்சி மொடா அயர்ச்சி.. எதுக்கு இந்த படத்தை எடுத்தாங்கனே தெரியல? என்பது போல் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இந்த பதிவானது தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து படத்தைப் பார்த்த பலரும் விதவிதமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் நாட்களில் படத்தின் வசூலை பாதிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

Next Story