ப்ரீ புக்கிங்கில் கெத்து காட்டும் விடாமுயற்சி!.. ரிலீஸ்க்கு முன்னாடியே இத்தனை கோடி வசூலா?..

by Ramya |
vidamuyarchi
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். இவரது நடிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. அதிலும் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

விடாமுயற்சி திரைப்படம்: துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று பொங்கல் ரேஸிலிருந்து விலகியது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு படம் நாளை வெளியாகிறது.

விடாமுயற்சி ரிலீஸ்: கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தார்கள். கடைசியாக 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு இந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் ஒரு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம். தற்போது நாளை படம் வெளியாக இருப்பதால் தற்போதிலிருந்து கொண்டாட்டம் தொடங்கி இருக்கின்றது.


இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1000 ஸ்கிரீன்களில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கின்றது. படம் நாளை ரிலீசாக இருப்பதால் நேற்று முதலே ப்ரீ புக்கிங் தொடங்கி இருக்கின்றது

ப்ரீ புக்கிங் வசூல்: படம் உலகம் முழுவதும் தமிழகத்திலும் ஃப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூல் செய்து இருக்கின்றது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் உலக அளவில் ப்ரீ புக்கிங்கள் மட்டும் 25 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நிச்சயம் முதல் நாளில் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story