விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்!. சீக்கிரம் வருது செம அப்டேட்!...

by Murugan |
vidaamuyarchi
X

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன் என பலரும் நடித்து உருவான திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த படம் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், படம் இன்னமும் வெளியாகவில்லை. அதற்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

குட் பேட் அக்லி: அதில் முக்கிய காரணம் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் படப்பிடிப்பு அடிக்கடி நிறுத்தப்பட்டது. அஜித்தும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திற்கு போய்விட்டார். அது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வெளியானது.


ஒருகட்டத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஏனெனில், அஜித்தின் துணிவு படம் 2023 ஜனவரி மாதம் வெளியானது. அதன்பின் இதுவரை 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி பாக்கி இருப்பதாக சொல்லப்பட்டது.

பொங்கல் ரிலீஸ்: அந்த பாடல் காட்சியும் சமீபத்தில்தான் எடுக்கப்பட்டது. அதோடு, படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, படம் எடுக்க எடுக்க படத்தின் டப்பிங் வேலைகளை மகிழ் திருமேனி செய்து வந்தார். அதோடு, படம் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


விடாமுயற்சி படம் வருவதால் மற்ற படங்கள் பின் வாங்கியது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் மட்டுமே ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகவில்லை என லைக்கா நிறுவனம் அறிவித்து அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

விடாமுயற்சி ரிலீஸ்: அதேநேரம், குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் இருக்கிறார். அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அவர் சொல்லியிருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 23ம் தேதி விடாமுயற்சி வெளியாகவுள்ளதாக செய்தி கசிந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story