தொடர் ஏழரை!.. விடாமுயற்சிக்கு எப்பதான் விடிவு காலம்?.. பொறுமை இழக்கும் அஜித் ஃபேன்ஸ்..

by Murugan |
vidamuyarchi
X

vidamuyarchi

vidamuyarchi: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. 2023ம் வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு இப்படம் வெளியானது. அதன்பின் இதுவரை அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. துணிவு படம் வெளியாகி ஒரு வருடம் 10 மாதங்கள் ஆகிறது. இந்த படம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

அதன்பின் அவர் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். ஆனால், கதைக்கே சில மாதங்கள் எடுத்துக்கொண்டார் அவர். ஒருவழியாக ஒரு ஆங்கில படத்தின் கதையை உரிமை வாங்கி விடாமுயற்சி படம் துவங்கியது. ஆனால், படம் துவங்கியது முதலே பிரச்சனைதான்.

பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த இடைவெளியில்தான் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்றப்போனார்.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பும் துவங்கியது. அதன்பின் ஒருவழியாக விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டனர். ஆனாலும் ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அஜித் இப்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.


எனவே, விடாமுயற்சி தீபாவளிக்கு வெளியாகாது என சொல்ல தேவையில்லை. சரி பொங்கலுக்காவது விடாமுயற்சி வருமா என்றால் ஏற்கனவே குட் பேட் அக்லி பொங்கலுக்கு துண்டை போட்டு வைத்திருக்கிறார்கள். சரி நவம்பர் 14ம் தேதி விடாமுயற்சியை விடலாம் என்றால் அன்று சூர்யாவின் கங்குவா வருகிறது. டிசம்பர் மாதம் விடுதலை 2 வருகிறது.

எனவே, விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பொங்கலுக்கு விடாமுயற்சி வந்தாலும் சரி, குட் பேட் அக்லி வந்தாலும் சாரி ஒரு சிக்கல் இருக்கிறது. அதற்கு காரணம் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரன் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் ராம்சரண் படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. கண்டிப்பாக அஜித்தை ஒப்பிட்டால் ராம்சரண் படத்திற்கே அதிக வரவேற்பு இருக்கும். எனவே, இதுவும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் விடாமுயற்சி படம் சந்தித்த, சந்திக்கவிருக்கிற சிக்கல்களை போல வேறெந்த படமும் பிரச்சனைகளை சந்தித்திருக்காது என உறுதியாக சொல்லலாம்.

Next Story