பவர் பேக்காக வெளியான விடாமுயற்சி 'பத்திக்கிச்சு' பாடல்.. அதுல யாரெல்லாம் இத கவனிச்சீங்க..

by Ramya |   ( Updated:2025-01-19 08:07:59  )
Pathakichu
X

Vidamuyarchi: மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படத்தை படக்குழுவினர் எடுத்து வந்தார்கள்.

படம் ஹாலிவுட் திரைப்படமான பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் ஆகும். இந்த திரைப்படத்தை அஜர்பைஜானில் எடுத்து வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட காலம் சூழ்நிலை காரணமாக படம் எடுப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எது எப்படியோ ஒரு வழியாக படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து விட்டார்கள்.


கடந்த டிசம்பர் மாதம் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து அப்படத்தின் படப்பிடிப்பையும் விடாமுயற்சியுடன் சேர்த்து முடித்து விட்டார். தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. அதற்கு முன்னதாக விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காப்பிரைட்ஸ் பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் பிப்ரவரி 6ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்து டிரைலருடன் வெளியீட்டு தேதியை அறிவித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் முதல் சிங்கள் சவதீகா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் சக்க போடு போட்டு வந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கின்றது. பத்திக்கிச்சு என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அனிருத் இசையில் சூப்பர் சிங்கர் பிரபலம் யோகி சேகர் இப்பாடலை பாடியிருக்கின்றார். மேலும் இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியிருக்கின்றார் .

இன்று காலை 10:40க்கு வெளியான இந்த பாடல் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் நடிகர் அஜித்துக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கின்றது. மேலும் இந்த பாடலின் ஆரம்பத்தில் காரை வைத்து அதாவது காரின் டயர் மார்க்கை வைத்து ஏ கே என்று அவரின் பெயரை உருவாக்கி இருக்கிறார்கள்.


பாடலின் ஆரம்பத்தில் இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. 'பத்திக்கிச்சு ஒரு ராட்சசன் திரி வெடிச்சு தான் இது தீருமே பொத்தி வச்ச அணு ஆயுதம் இனி உலகையே பலி கேட்குமே ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்'.. என்ற வரிகளில் பாடல் தொடங்குகின்றது. நடிகர் ரஜினிகாந்த்க்கு எப்படி டைகர் கா ஹுஹும் என்ற பாடல் போல் நடிகர் அஜித்துக்கு இந்த பாடல் ஒரு டிரேட் மார்க்காக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலும் ட்ரெண்டிங்கில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விடாமுயற்சி படத்தின் டிரைலரும் ஹாலிவுட் படத்தைப் போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நிச்சியம் இந்த திரைப்படம் இரண்டு வருடங்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story