கோட், பீஸ்ட், லியோ, பொன்னியின் செல்வன் எல்லாம் ஓரம்போ... அதுல விடாமுயற்சிதான் பெஸ்ட்!
அஜீத்குமார் நடிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் விடாமுயற்சி படம் நாளை வெளியாக உள்ளது. இதையொட்டி சமூகவலைதளங்களில் அதுகுறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
கோட், பீஸ்ட், லியோ, பொன்னியின் செல்வன் படங்களுக்குத் தான் அதிகமாக ஓபனிங் கிடைத்தது. அதை எல்லாம் தாண்டிப் போயிடுச்சு விடாமுயற்சி. குறிப்பாக வெளியூர்ல டிக்கெட் புல்லா வித்து முடிஞ்சிட்டுது.
30 கோடி ரூபாய்: 9 மணி காட்சி ஓப்பன் பண்ணாமலேயே மற்ற எல்லா காட்சிகளும் ஃபுல். ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய். ஓவர்சீஸ்ல குறிப்பா ஐரோப்பாவுல 1500 ஸ்க்ரீன்ஸ், எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு அமெரிக்காவுல பெரிய லிஸ்டே போட்டுருக்காங்க. அங்கு அதிகப்படியா இருக்குறவங்க தெலுங்குக்காரங்க தான்.
அவங்க என்ன சொல்றாங்கன்னா அமெரிக்காவுல ஜூனியர் என்டிஆர் படத்துக்கு எவ்வளவு ஓபனிங் இருக்குமோ அதை எல்லாம் தாண்டி 10 மடங்கு அதிகமா இருக்குதாம். அஜீத் ரசிகர் மன்றம் இருக்கோ இல்லையோ அஜீத் மாதிரியே அவங்க மனசுலயும் கடவுள் இருக்காரு. ஏன்னா அங்கு எஸ்எம்சின்னு ஒரு அரிய வகை நோயால குழந்தைங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க.
16 கோடி: அவங்களுக்கு நிதி திரட்டுவதற்காக 16 கோடி தேவைப்படுது. அதனால விடாமுயற்சி படம் பார்க்க வருபவர்கள் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் எவ்வளவு வேணுமானாலும் கொடுக்கலாம். அதற்காக அங்கு உள்ள டிக்கெட்ல ஒரு பார்கோடு குழந்தைங்க படத்தோட போட்டு விக்கிறாங்க. இது அஜீத்தின் பார்வைக்கும் போயிருக்கு.
பெரிய புரொமோஷன்: விடாமுயற்சி படத்துக்கு அதிகாலை காட்சிக்காக திருவனந்தபுரம், பாலக்காடு, கொச்சி, பெங்களூருன்னு படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்தப் படம் ஆரம்பத்துல இருந்து பல தடங்கல்கள் ஏற்பட்டு கடந்து வந்துருக்கு. டைரக்டர் நேற்று கூட தயவு செய்து எதிர்பார்த்து வந்துடாதீங்கன்னு சொல்றாரு. ஆனா அதுதான் பெரிய புரொமோஷன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.