படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. விடாமுயற்சிக்கு விக்கி போட்ட கமெண்ட் பாருங்க....

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் அஜித்தின் 62 வது திரைப்படமாக உருவானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு நேற்று உலகம் எங்கும் வெளியானது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்
கைவிடப்பட்ட விக்னேஷ் சிவன்: துணிவு திரைப்படத்தை முடித்த பிறகு நடிகர் அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு காமிட்டானார். இந்த திரைப்படத்தை யார் இயக்கப் போகின்றார் என்று கூறிவந்த நிலையில் முதலில் விக்னேஷ் சிவனின் பெயர் தான் அடிபட்டது. ஆனால் அவர் கொடுத்த கதை அஜித்துக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் திருப்தி கொடுக்காத காரணத்தால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
அதன் பிறகு தான் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவதற்கு முன் வந்தார். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் கதை மகிழ் திருமேனி கதை கிடையாது. பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் கதையை வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார் மகிழ் திருமேனி.
விடாமுயற்சி விமர்சனம்: படம் நேற்று வெளியானது முதலே அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகிறார்கள். இந்த திரைப்படம் அஜித் திரைப்படம் போல இல்லை. அதே சமயம் மகிழ் திருமேனி இயக்கிய படமாகவும் இல்லை என்று கூறி வருகிறார்கள். அனிருத் இசை மட்டுமே படத்தை காப்பாற்றி இருக்கின்றது. திரிஷாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கின்றது என்று தொடர்ந்து தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் பதிவு: இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்க முடியவில்லை என்கின்ற வருத்தத்தில் இருந்தாலும், விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்து அந்த படத்தை பாராட்டி பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்ததாவது 'விடாமுயற்சி திரைப்படம் திரில்லர் படமாக உள்ளது.
புதிர்களை தீர்வு பண்ணும் விதமாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளும் திருப்பங்களும் இப்படத்தில் மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கின்றார். மகிழ் திருமேனி அஜித் சாரின் ஒவ்வொரு காட்சிகளும் பிரேமில் தாறுமாறாக இருக்கின்றது. அனிருத்தின் பின்னணி இசை மிரட்டுகின்றது. மொத்த படத்தையும் அஜித் சார் தனது தோளில் சுமந்து இருக்கின்றார்.
ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது, வாழ்த்துக்கள்' என பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.