102 டிகிரி காய்ச்சலில் அஜீத் செய்த வேலை... அதிர்ச்சியில் உறைந்த யூனிட்
நடிகர் அஜீத்குமார் தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி என்ற ரீதியில் செயல்படுபவர். அவருக்கு என்று ஒரு மாஸ் ரசிகர்கள் இருக்காங்க. இருந்தாலும் அவர்களை எல்லாம் முதலில் வீட்டையும், குடும்பத்தையும் கவனிங்க. அப்புறம் தான் நாங்கன்னு அட்வைஸ் சொல்லி இருக்கிறார்.
அதே போல யாரும் தன்னை 'அல்டிமேட், கடவுளே, தல அது இது..'ன்னு பட்டம் வச்சி அழைக்க வேண்டாம். ஏகே, அஜீத்குமார் இதுவே போதும் என்றும் கறாராக அன்புக்கட்டளை இட்டுள்ளார்.
அஜீத் தான் நடிக்கும் படங்களில் தற்போது கவனம் செலுத்துவது மட்டும் அல்லாமல் கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனது காதல் மனைவி ஷாலினியுடன் இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகாக குடும்பம் நடத்தி வருகிறார்.
இவர் படப்பிடிப்பிலும் தன்னால் எந்த வகையிலும் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம். அதனால் தனக்கு சின்னக் காய்ச்சல், தலைவலி என்றாலும் கூட மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுக்காமல் நடித்துக் கொடுத்து விடுவாராம். அப்படித்தான் விடாமுயற்சி படப்பிடிப்பிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடல் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது நடிகர் அஜீத்துக்கு 102 டிகிரி காய்ச்சல். இருமிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். ஆனால் 40 டான்சர்கள் இருக்காங்க.
இத்தனை டெக்னீஷியன்கள் இருக்காங்க. யாரும் பாதிக்கப்படக் கூடாது. நான் அரை மணி நேரத்துல வர்ரேன்னு சொல்லிட்டுப் போனாரு. சொன்ன மாதிரி மாத்திரை போட்டுட்டு வந்து பாடலுக்கு டான்ஸ் ஆடினார் என மெய்சிலிர்க்கிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் விடாமுயற்சி. அஜீத், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
அதனால் இப்போதே ரசிகர்கள் உற்சாகம் பொங்க படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையவில்லை. அதனால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் சொல்கின்றனர். அதே நேரம் படத்திற்கான டிரெய்லரையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.