விடாமுயற்சி டீசர் ரெடி!.. ரஜினியை வச்சி ஸ்கெட்ச் போடும் லைக்கா!. இது சரியா வருமா?...
Vidamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம்தான் விடாமுயற்சி. 2024ம் வருடம் துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் துவங்கியது. ஒரு ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி இந்த படத்தை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார்.
மேலும், வில்லனாக அர்ஜூன் மற்றும் பிக்பாஸ் புகழ் ஆரவ்வும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் தாமதமானது. மழை, மணல் புயல், நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் போனது என பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இடையில் அவ்வப்போது அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்றவும் போய்விடுவார். ஒருபக்கம், லைக்கா நிதி நெருக்கடியில் சிக்கி சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. இடையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த சில போஸ்டர்களை வெளியிட்டார்கள். அதில், சில போஸ்டர்கள் மட்டுமே ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
இப்போது ஒருவழியாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். ஆனாலும் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருக்கிறது. விரைவில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அந்த பாடலை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, தீபாவளிக்கு விடாமுயற்சி வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
ஒருபக்கம், குட் பேக் அக்லி படத்தில் நடிக்க போய்விட்டார் அஜித். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விடாமுயற்சி டீசர் வீடியோவை ரெடி பண்ணி விட்டாராம் மகிழ் திருமேனி. விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது.
லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரை திரையிடலாமா எனவும் லைக்கா நிறுவனம் யோசித்து வருகிறது. ஆனால், விடாமுயற்சி டீசரை தனியாக விட்டால் மட்டுமே அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது.