தமிழ் சினிமாவால் விரட்டப்பட்ட நடிகை! இன்று ரஜினி படத்தில் வாய்ப்பு.. நல்ல கம்பேக்
ரஜினி 2027ஆம் ஆண்டு சினிமாவிற்கு குட் பை சொல்கிறார். இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்றெல்லாம் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதெல்லாம் வதந்திதான் என்றும் சொல்லப்படுகிறது. விமான நிலையத்தில் அவர் ஸ்டைலாக அதுவும் வேகமான நடையை பார்க்கும் போது மனுஷன் இன்னும் 20 வருடத்திற்கு சினிமாவில் இருப்பார் போலயே என்றுதான் தோன்றுகிறது.
தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகமும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக இந்தப் படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு பாலிவுட்டில் இருந்தும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
குறிப்பாக வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வித்யாபாலனை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் இந்த கோலிவுட் சினிமாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் என ஒரு பிளாஷ்பேக்கை சொல்லியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’ படத்தில் முதலில் திரிஷாவுக்கு பதிலாக கமிட் ஆனவர் நடிகை வித்யாபாலன்தானாம்.
10 நாள்கள் நடித்தாராம். சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தாராம். காட்சிகளை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்துக்கு அக்கா மாதிரி இருக்கிறார் என சொல்லி அவரை அந்தப் படத்தில் இருந்து தூக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வித்யாபாலன் தங்கியதற்கான செலவையும் கொடுக்கவில்லையாம்.
வித்யாபாலன் சினிமாவில் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகை என்பதால் அவரிடமும் பணம் இல்லையாம். ஸ்ரீகாந்தும் வளர்ந்து வந்த நடிகர். அதனால் அவரால் முடிந்தளவு 5000 பணத்தை வித்யாபாலனுக்கு கொடுத்து உதவியிருக்கிறார். இதர பணத்தை தான் அணிந்திருந்த தங்க வளையலை விற்று அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு சென்றாராம் வித்யாபாலன்.

இப்படி மொத்தமாக அவரை அவமானப்படுத்திய கோடம்பாக்கத்தில் மீண்டும் ஒரு நல்ல கம்பேக்குடன் நுழைந்திருக்கிறார் வித்யாபாலன். இன்று பாலிவுட்டில் பல கோடிகளுக்கு சொந்தக்காரராக வலம் வரும் வித்யாபாலன் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
