வெற்றிமாறனுக்கு முதல் தோல்வி விடுதலை 2ஆ? 6 நாட்களில் மண்ணை கவ்விய வசூல்…
Viduthalai2: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை இரண்டாம் பாகத்தின் ஆறு நாட்கள் வசூல் விவரம் வெளியாகி இருக்கும் நிலையில் திரை துறையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் சில ஆண்டுகளாக இயக்கி வந்தார். முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்திற்கும் இளையராஜா இசையமைப்பு செய்திருக்கிறார்.
முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரின் மனைவியாக மஞ்சுவாரியார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்த திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இது தொடரவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அதிலும், விடுமுறை தினமான நேற்று கூட இப்படத்திற்கு கூட்டம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகளவில் வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நாள் குடும்ப ரசிகர்கள் யாரும் படத்தை பெரிய அளவில் விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல் படத்தில் சமூக மாற்றத்திற்கான முயற்சி என்பதால் பல தரப்பினரையும் சேரவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் உச்சத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், முதல் ஆறு நாட்களில் 45 கோடி வரை உலகமெங்கும் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகம் தமிழகத்தில் வசூல் இதுவரை 30 கோடி ரூபாய் மட்டுமே என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் வெற்றிமாறனின் தோல்வி படங்களில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..