தளபதி மட்டுமில்ல அம்மணியும் கெத்துதான்... சங்கீதா விஜயின் சொத்து மட்டும் இத்தனை கோடியா?

by Akhilan |
vijay sangeetha
X

Vijay: தளபதி விஜய் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்த ஆச்சரிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

விஜய்-சங்கீதா: நடிகர் விஜய் தன்னுடைய நடிப்பில் கொடிக்கட்டி பறந்து வந்த சமயம் விஜயை லண்டனில் இருந்து பார்க்க வந்த ரசிகை தான் சங்கீதா. இருவருக்கும் சாதாரண நட்புதான் தொடங்கியதாம். அதை தொடர்ந்து இருவீட்டாரும் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தனர்.

லண்டனில் நெருங்கிய வட்டாரத்தில் இடையே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சென்னையில் இவர்களுக்கு பிரம்மாண்டமாக இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

திடீர் பிரச்சனை: நடிகர் விஜய் பொது விழாவுக்கு வரும் போது எப்போதுமே தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு வருவார். ஆனால் கடைசியாக நடந்த மாஸ்டர் பட விழாவை தவிர விஜயுடன் சங்கீதா பொதுவெளியில் எங்குமே காட்சி கொடுக்கவில்லை.

இருவருக்குமே பிரச்னை எனக் கூறப்படுகிறது. விவாகரத்து நடந்து விட்டதாக ஒரு பக்கமும், இல்லை பிள்ளைகள் படிப்பிற்காக அவர் லண்டனில் செட்டில் ஆகி இருப்பதாகவும் பல தகவல்கள் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கூட வந்த தகவலின் படி விஜய் தன்னுடைய மனைவி மற்றும் மகனுக்கு சொத்தை பிரித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சங்கீதாவின் சொத்து மதிப்பு: ஆனால் இது ஒரு புறமிருக்க சங்கீதா விஜய் லண்டனில் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவராம். அவருடைய அப்பா சொர்ணலிங்கம் லண்டனில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் என்பதாலும் சங்கீதாவின் சொத்து மதிப்பு மட்டுமே 400 கோடி இருக்கும் எனத் தகவல் வந்துள்ளது.

Next Story