விஜயுடன் ஜோடி போட்டு விமானத்தில் போகும் திரிஷா!.. வெளியானா வீடியோ!...
Vijay Trisha: விஜயுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, வில்லு, லியோ ஆகிய படங்களில் நடித்தவர் திரிஷா. இருவருக்குமே நல்ல நட்பு உண்டு. திரையில் விஜய் - திரிஷா ஜோடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது. லியோ படத்தின் ஒரு காட்சியில் விஜய்க்கு திரிஷா லிப் லாக் கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
விஜய் சங்கீதாவை என்பவரை 1999ம் வருடமே திருமணம் செய்து கொண்டார். இவர்களுகு ஒரு ஆண், பெண் குழந்தை உண்டு. தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே விஜயின் மனைவி, மகன், மகள் ஆகியோர் அவருடன் வசிப்பதில்லை.
அவர்கள் எல்லோரும் இப்போது லண்டனில் வசிக்கிறார்கள். அதற்கு காரணம் சங்கிதாவின் பெற்றோர் லண்டனில்தான் வசித்து வருகிறார்கள். ஜேசன் சஞ்சய் சினிமா தொடார்பான படிப்பை படித்தது கூட அங்குதான். சென்னை நீலாங்கரையில் விஜய் தனியாகவே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக விஜய் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் அவரின் மனைவி சங்கீதாவை பார்க்க முடிவதில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் உலா வருகிறது. ஒருபக்கம், விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.
வெளிநாட்டில் இருவரும் ஜாலியாக சுற்றும் புகைப்படம் லியோ படம் உருவானபோது வெளியானது. இந்த வருடம் ஜூன் மாதம் விஜயுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருந்தார். இந்நிலையில்தான், விஜயும், திரிஷாவும் தனி விமானதில் பறந்தது இப்போது தெரியவந்திருக்கிறது.
இருவரும் விமானத்தில் செல்ல கார் ஏறும் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனேகமாக கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்ளவே விஜயும், திரிஷாவும் சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.