ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Justiceforsangeetha… விஜயிடம் திடீர் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்…

by Akhilan |
விஜய் சங்கீதா
X

விஜய் சங்கீதா 

Justice For Sangeetha: நடிகர் விஜய்க்கு எதிராக ரசிகர்கள் சிலர் எக்ஸ் வலைதளத்தில் ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கி அதில் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாகவே நடிகர் விஜய்யின் மீது நிறைய அளவில் விமர்சனங்கள் குவிப்பது வழக்கம் தான்.

ஆனால் இந்த முறை மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் நடிகர் விஜய் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனை சேர்ந்த சங்கீதாவை நடிகர் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா ஷாஷா என்ற குழந்தைகள் உள்ளனர்.

எல்லா திரைப்படங்களின் முக்கிய விழாவிற்கும் நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா உடன் தான் வந்து கொண்டிருந்தார். கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனைவி சங்கீதாவுடன் விஜய் கலந்து கொண்டது தான் கடைசி நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் பொது இடங்களில் இதுவரை ஒன்றாக வலம் வரவில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக சங்கீதா வெளிநாடு சென்றுவிட்டார் என விஜய் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சங்கீதா இறப்பு நிகழ்வில் தனியாக கலந்துக்கொண்டது மேலும் பிரச்னையாக மாறியது. இதற்கு காரணம் நடிகர் விஜய் மற்றொரு நாயகியுடன் காதலில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்தது.

நடிகை திரிஷா மற்றும் விஜய் இருவருக்கும் காதல் இருப்பதாக பலரும் தொடர்ச்சியாக பேசி வந்தனர். ஆனால் இரு தரப்பும் இது குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவா செல்ல தனி விமானத்தில் நடிகர் விஜய்யுடன் திரிஷா பயணம் செய்திருக்கிறார்.

விஜயின் முதல் மாநில மாநாடு சமயத்தில் கூட ஸ்பெயின் நாட்டின் கொடியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குழப்பியதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் மாநாடு என்பதால் கேரவனில் மறைத்து வைத்து விட்டீர்கள்.

ஆனால், தனி விமானம் செல்ல செக்கிங் சமயத்தில் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் மற்ற ரசிகர்கள் விஜயின் மனைவி சங்கீதாவின் பெயரை குறிப்பிட்டு Justice For Sangeetha என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் தற்போது தனி விமானத்தில் விஜயுடன் பயணம் செய்த தயாரிப்பாளர் ஜெகதீஷை குறிப்பிட்டு இதற்கு விளக்கம் கொடுக்குமாறு பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் எண்ட்ரி சமயத்தில் விஜய் இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story