ஒரே பிரஷர்... பராசக்தி டைட்டிலை விட்டுக் கொடுத்தேன்... விஜய் ஆண்டனி ஓபனா சொல்லிட்டாரே!

by SANKARAN |
vijay antony
X

பராசக்தி படத்துக்கு டைட்டில் முதல்ல வச்சது விஜய் ஆண்டனி தான். தெலுங்குல பராசக்தி டைட்டிலை இவர் 2024ல் பதிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி. அவர் தான் எஸ்கே. படத்துக்கு விட்டுக் கொடுத்துருக்காரு. அது ஏன்னு நிருபர் ஒருவர் அவரிடம் கேட்கிறார். அதற்கு விஜய் ஆண்டனி சொன்ன பதில் இதுதான்.

பராசக்தி டைட்டில் எங்கிட்ட இருக்குன்னு எஸ்கே. படக்குழுவினருக்கும் தெரியாது. தெரியாம அவங்க ரெண்டு மூணு ரிஜிஸ்டரேஷன் யூனியன் இருக்கு. அங்க ஏதேச்சையா நடந்த விஷயம். கடைசியா அவங்க அறிவிச்சிட்டாங்க. பெரிசா ஆகிடுச்சு. மக்கள் மனசுல போய் சேர்ந்துடுச்சு.

அதனால நானே ப்ரண்ட்லியான முறையில விட்டுக் கொடுத்தேன். புரொடியூசரோட வலியும், அவரது ப்ரஷரும் எனக்குத் தெரியுது. தெரியாம எப்பவாவது கிளாஷ் நடக்கும். ரோட்ல நடக்கும்போது ஆக்சிடண்ட் நடக்கணும்னு பிளான் பண்ணிட்டுப் போறது இல்ல. திடீர்னு முட்டிக்கிறோம். அவங்களுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அந்த மாதிரிதான் இது. இன்டஸ்ட்ரிக்குள்ள எங்கேயாவது இப்படி நடக்கும். அதுல நான் மாட்டுனேன். ஆனா அதுக்கு யாருமே காரணமில்ல என்கிறார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன், கொலைகாரன், சைத்தான் என்ற பெயரில் படங்களை எடுத்துள்ளார். இதற்கு என்ன காரணம்னு கேட்கும்போது என் வாழ்வில் நெகடிவே கிடையாது. அதை டைட்டில்லயாவது வச்சா மக்கள் மத்தியில் பிச்சைக்காரன்னு படம். ஆனா நல்லா தானே இருக்குன்னு பாசிடிவான எண்ணம் வரணும். அதை செயல்படுத்தணும்கறதுதான் என்னோட எண்ணம் என்கிறார் விஜய் ஆண்டனி.


இவரது 26வது படத்துக்கு லாயர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜோஷூவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இப்போது இவரது கைவசம் ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன் என பல படங்கள் உள்ளன.

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் பராசக்தி. இது விஜயின் ஜனநாயகன் படத்துடன் 2026 பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. தற்போது அமலாக்கத்துறை ரெய்டில் படம் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

Next Story