2026ல பெரிய பிளான் இருக்கு.. அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய் ஆண்டனி..
தமிழ் சினிமாவில் இசையில் புதுமை புகுத்தி ஒரு கலக்கு கலக்கியவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளராக திரை துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த பிறகு ஒரு நடிகராக அடுத்த கட்டத்தில் பயணத்திற்கு தயாரானார். அப்படி இவர் நடித்த முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட் ஆக அமைந்தது.
சலீம் மற்றும் பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஓபனிங்கை விஜய் ஆண்டனி பெற்றார். அதில் பிச்சைக்காரன் திரைப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து விஜய் ஆண்டனியின் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் வெளியிடப்படுகிறது.
பொதுவாக இவரின் திரைப்படங்களை அவரை சொந்தமாக தயாரித்து வருகிறார். பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனி பல படங்கள் நடித்திருந்தாலும் அவரின் பெயர் சொல்லும் படம் என்னவோ பிச்சைக்காரன் தான். அதனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தார் அதுவும் சூப்பர்ஹிட் ஆனது. அதே நேரம் ரொமான்டிக் ஜானரான ரோமியோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்பொழுது விஜய் ஆண்டனி சக்தி திருமகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எனக்கு 2026 ஒரு பெரிய பிளான் இருக்கு என்று சூசகமாக அறிவித்துள்ளார் மேலும் அதில்,” அது அரசியல் தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நான் இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை. நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். தற்போது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”.
”விஜய் ஆண்டனியின் தனிப்பட்ட முயற்சியால் வருடத்திற்கு என்னால் நான்கு படங்கள் பண்ண முடியும் அவ்வளவு தான். இன்னும் நிறைய புது இயக்குனர்களை உருவாக்க வேண்டும் நல்ல கதைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்றால் என்னால் மட்டுமே அது முடியாது. தனியாக என்னால் பண்ண முடியாது. அதற்கென்று பலம் வேண்டும். அது விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் என்பது பப்ளிக் லிமிடெட் ஆக மாறினால் மட்டுமே முடியும்”.
”அந்த பலம் பப்ளிக் லிமிடெட் ஆக மாறினால் மட்டுமே எனக்கு கிடைக்கும். அடுத்த வருடம் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் என்பது விஜய் ஆண்டனி பப்ளிக் லிமிடெட் ஆக மாறப்போகிறது. இதனால் நிறைய புதுமுகங்கள் திறமையுள்ள இயக்குனர்களை அடையாளம் கண்டு தரமான சினிமாக்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்”. என்று கூறியுள்ளார். விஜய் ஆண்டனி யின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
