மீண்டும் வரும் பராசக்தி… மிஸ் செய்த எஸ்கே… தட்டி தூக்கிய நடிகர்.. இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கலையே?

Parashakthi: சூப்பர் ஹிட் திரைப்படமான பராசக்தி படத்தின் டைட்டிலை தற்போது இன்னொரு முக்கிய நடிகர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நாடக கலைஞராக இருந்தவரை நடிகராக உயர்த்திய திரைப்படம் தான் பராசக்தி. எண்பது ஆண்டுகள் கழிந்தும் இன்றளவும் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கிளைமேக்ஸ் காட்சியில் சிலிர்த்து போவது ஆச்சரியம் தான்.
அப்படி ஒரு மாபெரும் படைப்பான பராசக்தி படத்தின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்த கோலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் 25 வது திரைப்படத்திற்கு இந்த பெயர் வைக்கப்படலாம் என மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தது.
இன்று மாலை அந்த டைட்டில் அறிவிப்பு நடைபெற இருக்கும் சமயத்தில் அதற்கு முன் தற்போது பிரபல நடிகரான விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கு பராசக்தி என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த படக்குழுவின் அதிகாரப்பூர்வ போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கும் விஜய் ஆண்டனியின் 25 வது திரைப்படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்றும், தெலுங்கு, இந்தி, மலையாள மொழியில் பராசக்தி என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்க இருக்கிறார்.
படத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்ற
தற்போது சிவகார்த்திகேயனின் பட டைட்டில் என்னவாக இருக்கும் ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது. தமிழில் இதேபோன்று பராசக்தி என வெளியாகுமா? இல்லை வேறு ஏதாவது டைட்டலுடன் அறிவிக்கப்படுமா எனவும் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.