விக்னேஷ் சிவன் வாங்க நினைத்த அரசு ஹோட்டலை வாங்கிய விஜய்… இத கவனிக்கலையே?
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டதாக தகவல் பரவிய நிலையில் தற்போது அந்த ஹோட்டலை ஏற்கனவே நடிகர் விஜய் விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஆடம்பரம்
நடிகை நயன்தாரா தனி நாயகியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒருபுறம் தன்னுடைய தொழிலையும் வளர்த்துக் கொண்டு வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவரின் அழகு சாதன பிராண்ட் 9 ஸ்கின் மற்றும் செமிநைன் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்லாமல் கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே, தொடர்ச்சியாக சொத்துக்களை வாங்கிக் குவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சொகுசு பங்களாக்களையும் நயன்தாரா வாங்கியதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் புதுச்சேரி அரசின் ஹோட்டல் ஒன்றை அவருடைய கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டிருக்கிறார். இதில் ஆடிப்போன அரசு அதிகாரிகள் அதையெல்லாம் விலைக்கு தர முடியாது என மறுத்துவிட்டனர்.
அரசு கையில் இருக்கும் தனியார் விடுதிகளையாவது விலைக்கு தர வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க அதற்கும் மறுப்பு தெரிவித்தனராம். காரணம் சில ஆண்டுகள் முன்னரே இந்த விடுதிகள் முறையாக டெண்டர் விடப்பட்டு 99 வருட ஒப்பந்தத்தில் சிலருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாம்.
விஜய் வாங்கிய சொத்து
அந்த வகையில் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்ட கடற்கரை சொகுசு விடுதியை நடிகர் விஜய் அப்போதே வாங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. அவருடைய முக்கிய நிர்வாகியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் திட்டமாகவே இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் கெடுபிடியாக கேட்டது போல இல்லாமல் நடிகர் விஜய் முன்னவே திட்டமிட்டு அரசு டெண்டரை பயன்படுத்தியே வாங்கி இருக்கிறார். அதனால் தான் விஜய் விஷயம் பெரிய அளவில் விமர்சிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.