1. Home
  2. Cinema News

திட்டத்தை மாற்றிய விஜய்.. இதையும் சும்மா விட மாட்டாங்களே

vijay
41 குடும்பங்களையும் சந்திக்க விஜய் போடும் பக்கா ப்ளான்

தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் சந்திக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்காக அனுமதியும் வாங்க முயற்சித்து வந்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் கரூருக்கு சென்று பார்க்க எல்லா பக்கமும் அவர் முயற்சித்து வந்தார். இப்பொழுது அந்த  முயற்சியில் இருந்து பின்வாங்கியிருப்பதாக தெரிகிறது. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

41 பேர் உயிரிழந்தனர். இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் நடக்காத சம்பவம் இது. இது அனைவருக்குமே ஒரு பேரதிர்ச்சியாக மாறியது. உலகம் முழுவதும் இந்த செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு விஜய்க்கும் இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த அன்றே விஜய் இரவு சென்னைக்கு புறப்பட்டார். இப்படி ஆகிவிட்டதே? ஆறுதல் கூற கூட அவர் அங்கு இருக்கவில்லை என்பதுதான் எதிர்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டு.

ஆனால் சென்னை போய் இரண்டாவது நாளில் விஜய் வீடியோ காலில் வந்து பேசினார். அப்போதும் அது பேசு பொருளானது. நல்ல அரசியல் கட்சி தலைவர் என்றால் மக்களோடு மக்களாக நின்றிருக்க வேண்டும். ஹீரோயிசம் என்பது வெறும் படத்திற்கு மட்டும்தானா? நிஜத்தில் இல்லையா என்றெல்லாம் விஜயை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இது எதற்குமே விஜய் செவி சாய்க்கவில்லை,

தொடர்ந்து அவர் முயற்சியை மேற்கொண்டே தான் இருந்தார். எப்படியாவது கரூர் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தார். காவல்துறை அனுமதிக்காக காத்திருந்தார். ஆனால் இப்போது அந்த  திட்டத்தையே மாற்றியிருக்கிறார் விஜய். அதாவது உயிரிழந்த அந்த 41 பேர் குடும்பங்களையும் சென்னைக்கு வரவழைத்து ஒரு பெரிய அரங்கில் சந்திக்க போவதாக சொல்லப்படுகிறது.

திடீர் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் என தெரியவில்லை. ஒரு வேளை மீண்டும் தான் கரூர் வந்து அது மேலும் பிரச்சினையாகிவிடுமா என்று  நினைத்தாரா என்றும் தெரியவில்லை. ஆனால் சென்னையில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. இதுக்கும் இன்னும் எங்கெல்லாமோ இருந்து கூக்குரல் வருமே? அதையும் விஜய் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.