விஜய் 2026 முடிந்து இதான் செய்வார்… ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபலம்!

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலக இருப்பதாக ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நல்ல செய்தியை பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருப்பது வைரல் ஆகிவருகிறது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் அவருக்கு சம்பள உயர்வு 50 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக அதிகரித்த சம்பளம் தற்போது 69வது படத்தில் 300 கோடி வரை எனக் கூறப்படுகிறது.

இப்படி கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இக்கட்சியின் கொடி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விரைவில் கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட இருக்கிறது.

தன்னுடைய கட்சி பணிகளுக்காக ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் 69 ஆவது திரைப்படம் தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.

ஆனால் பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறுகையில் 2026 ஆம் தேர்தலில் விஜய் கண்டிப்பாக வெற்றி பெற மாட்டார். அடுத்த இலக்கு 2031 தான். அதுவரை விஜய் சாதாரண அரசியல்வாதி மாதிரி அறிக்கையை விட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவர் தோல்வியடைந்து மீண்டும் நடிப்புக்குள் தான் வருவார் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இருந்தும் விஜய் ரசிகர்கள் அரசியலில் தோல்வியடைந்து மீண்டும் சினிமாவுக்குள் வருவதை நடிகர் விஜய் விரும்ப மாட்டார். இதனால் அவர் வென்றால்கூட சினிமாவிற்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தோற்றால் அவர் கண்டிப்பாக திரும்பி வர மாட்டார் என பேசி வருகின்றனர். என்ன நடக்கப்போவது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it