விஜய் மாநாட்டில் அஜீத்தா..?! கூட்டணி யாருடன் தெரியுமா? பக்கா பிளானா இருக்கே..!
தளபதி விஜயின் தமிழ்நாடு வெற்றிக் கழகம் நடத்தும் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விக்ரவாண்டியில் உள்ள வி சாலையில் நடக்கிறது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டில் அஜீத் கலந்து கொள்வாரா? யாருடன் கூட்டணி என்ற தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா...
மழை பெய்யும் இந்தக் காலகட்டத்திலும் விஜயின் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய் ஒரு உச்ச நடிகர். அவர் சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார்.
அதனால் அங்கு பல யூடியூபர்களும் தினமும் வந்து பல விஷயங்களை எடுத்துச் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக ஏழெட்டு கிணறுகள் இருக்காம். அதை எல்லாம் பாதுகாப்பான முறையில் மூடி விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.
மாநாட்டுக்கான வசதிகளில் எந்த இடத்திலும் மக்களுக்குக் குறை வைக்கக்கூடாது என்ற அளவில் பணிகள் செய்யப்பட்டு வருகிறதாம். விஜயைப் பொருத்த வரை இந்த மாநாட்டுச் செலவு என்பது அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாம். முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். விஜயின் முதல் பிரம்மாண்ட செலவே லாபத்தை நோக்கிப் போவதாக இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து ஒரு தொண்டர் நடந்தே வந்து கொண்டு இருக்கிறாராம்.
திருத்தணி கோவிலுக்குள்ள 100 அடி நீளத்துக்கு த.வெ.க. கொடியைத் தூக்கிக்கிட்டு போனார்களாம். போலீசார் வந்து தடுத்து இந்த மாதிரி எல்லாம் கோவிலுக்குள் அரசியல் பிரச்சாரம் பண்ணக்கூடாதுன்னு தடுத்து விட்டார்களாம். இதை எல்லாம் பார்க்கும்போது மற்றக் கட்சியினருக்கு எதையாவது ஒரு பசையைக் கொடுத்தால் தான் அவங்களை உசுப்பேத்த முடியும்.
ஆனா இங்கு தன்னார்வலர்களாக நிறைய பேர் வருவது விஜய் அரசியல்ல எதையோ பண்ணிருவாரோ என்ற எண்ணத்தை எல்லாம் நமக்குக் கொடுக்குது. நல்லவேளையாக விஜய் வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மாநாட்டுக்கு வர வேண்டாம்.
தயவு செய்து யாரும் கஷ்டப்படாதீங்க. உங்க மனசுல இருக்கேன். டிவில வீட்ல உட்கார்ந்து பாருங்கன்னு அறிக்கைக் கொடுத்துருக்காரு. அது நல்ல தலைவனுக்கு உரிய அழகு. மாநாட்டில் மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்னு நாட்டுப்புறக்கலைகளை மேடையில் அரங்கேற்ற உள்ளாராம்.
அஜீத்திடம் இருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் வாங்கி அதை மேடையில் படிக்கலாம்னு நினைச்சிருக்குறதா ஒரு தகவல் இருக்கு. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பெரிய கொண்டாட்டமாக அமையும். இதற்கு முன் இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டது இந்த மாநாட்டின் மூலம் ஒன்று சேர வாய்ப்பு இருக்கு. அது மிகப்பெரிய அளவில் இருக்கும்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாணுடன் கூட்டணி வைத்த மாதிரி விஜய் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பார்னு ஒரு தகவல் வருது. அதற்கேற்ப எடப்பாடியும் விஜய்க்கு வாழ்த்து சொல்லிருக்காரு. இதுவரை திமுக தரப்பில் இருந்து வாழ்த்துப் போகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.