சொந்த புத்தியே இல்லையா?.. சூர்யாவோட வில்லன், ஹீரோயினை காப்பியடிக்கும் விஜய்!.. தளபதி 69 என்னாகுமோ?
இந்திய சினிமாவிலேயே எந்தவொரு பிரபல நடிகரும் வாங்காத அளவுக்கு தயாரிப்பாளர்களிடம் மொத்தமாக பெரும் தொகையை கடைசி படம் என சொல்லியே விஜய் கறந்து விட்டார் என்கின்றனர். 275 கோடி சம்பளம் வாங்கும் விஜய்யின் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ காஸ்டிங் அப்டேட் இன்று வெளியானது.
சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல் தான் விஜய்க்கு வில்லனாக தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக அஃபிஷியல் அப்டேட்டையே தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை தளபதி விஜய் தனது கடைசி படத்துக்கு புக் செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சூர்யாவுக்கு முன்னாடியே விஜய்யுடன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகி சர்வதேச ட்ரோல் ஆன பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புட்ட பொம்மா டான்ஸ் போட்டு அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவை முகமூடி படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து மிகப்பெரிய தோல்வியை விஜய் சந்தித்து இருந்தார்.
வரிசையாக பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம், கிஸி கா பாய் கிஸி கி ஜான், ஆச்சார்யா உள்ளிட்ட பல படங்கள் தோல்வியை தழுவின. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவே குண்டூர் காரம் படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டு ஸ்ரீலீலாவை ஹீரோயினாக மாற்றியிருந்தார்.
இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை தான் விஜய்க்கு ஹீரோயினாக ஹெச். வினோத் ஒப்பந்தம் செய்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் தகவல்கள் கசிந்துள்ளன. பாபி தியோல் அறிவிப்பு இன்று வெளியான நிலையில், நாளை பூஜா ஹெக்டேவின் அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். மேலும், மமிதா பைஜுவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்றும் கூறுகின்றனர். சீக்கிரமே கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அஃபிஷியல் அப்டேட்டை வெளியிட்டு விடும்.