சூர்யாவுடன் கைகோர்க்கும் பிரபல டோலிவுட் ஹீரோ!.. ஓஹோ அதுக்குத்தான் அப்படி புரமோஷன் பண்ணாரா?

by SARANYA |
சூர்யாவுடன் கைகோர்க்கும் பிரபல டோலிவுட் ஹீரோ!.. ஓஹோ அதுக்குத்தான் அப்படி புரமோஷன் பண்ணாரா?
X

நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் சூர்யா 46 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது பெயரிடப்படாத சூர்யா 46 படம். இந்தியாவில் முதல் இன்ஜின் உருவாக்கப்பட்டது பற்றிய கதைக்களமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிருணாள் தாகூர் உள்ளிட்டோர் படத்தில் ஹிரோயின்களாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 85 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமத்தை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூர்யா படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டிஜிட்டல் உரிமமாக கருதப்படுகிறது. சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் தற்போது சூர்யா 46 படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தை நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, யோகி பாபு, நட்டி சுப்ரமணியம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு அந்த படம் வெளியாகும் என்றும் படத்துக்கு வேட்டைக் கருப்பு என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், சூர்யா 46 படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில், ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் விஜய் தேவரகொண்டா பங்கேற்று பேசிய நிலையில், இந்த கூட்டணி தான் அதற்கு காரணம் ந்கின்றனர். சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா 45, 46 என தயாராகி வருகிறது. அவரின் அடுத்து ரிலீஸாகும் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Next Story